'அசர வைக்கும் இந்திய வம்சாவளி பெண்ணின் வருமானம்'... 'ஆனா என்ன பாத்து இப்படி பேசுறாங்க'... இளம்பெண்ணுக்கு இருக்கும் பெரிய கவலை!
முகப்பு > செய்திகள் > உலகம்ஒரு பெண் தனது திறமையால் வளர்ந்து தொழில் ரீதியாக ஜெயிக்கும் போது அவர்களை நோக்கிப் பல விமர்சனங்கள் வைக்கப்படும். அதுபோன்ற ஒரு விமர்சனத்தைத் தான் இளம்பெண் ஒருவர் எதிர்கொண்டு வருகிறார்.
![People dismiss Sabrina Saggu as a man\'s arm candy because of her cloth People dismiss Sabrina Saggu as a man\'s arm candy because of her cloth](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/world/people-dismiss-sabrina-saggu-as-a-mans-arm-candy-because-of-her-cloth.jpeg)
லண்டனில் பிறந்து தற்போது கனடாவில் வசித்து வருபவர் தான் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சப்ரினா சக்கு. கிரிப்டோகரன்சி மற்றும் பயிற்சி வகுப்புகள் நடத்துவது மூலம் வருடத்துக்கு 70 ஆயிரம் பவுண்டுகள் வரை சப்ரினா சம்பாதித்து வருகிறார். ஆனால் அவருக்குப் பெரிய வருத்தம் என்பது எப்போதும் உள்ளது. அவர் அணியும் உடையை வைத்து பலர் அவரது திறமையைக் குறைத்து மதிப்பிட்டு வருகிறார்கள்.
அவரது உடைகளை மையமாக வைத்து, அவர் ஜெயிக்கவில்லை என்றும், யாரோ ஒரு பணக்கார ஆணையே அவர் சார்ந்திருப்பதாகவும் பல்வேறு விமர்சனங்கள் அவரை சுற்றிச் சுழல்கிறது. இதுகுறித்து பேசிய சப்ரினா, எனது உடையையும், எனது திறமையையும் ஏன் தொடர்புப் படுத்திப் பேசுகிறார்கள் எனப் புரியவில்லை.
எனது ஆடம்பர வாழ்க்கைக்கு எந்த ஆணையும் சார்ந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை எனக் கூறியுள்ள அவர், நான் சாதித்தது எல்லாம் எனது திறமை மூலம் மட்டுமே எனக் கூறியுள்ளார்.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)