ராட்சச அலையில் சிக்கிய 'குழந்தைகளை' மீட்க... உயிரை பயணம் வைத்த 'ஹீரோ'யிக் 'தந்தை'... 'உசுரு' போற ஒரு 'செகண்ட்' முன்னாடி 'பசங்க'ள பாத்து,,.. உருக வைக்கும் கடைசி 'நிமிடங்கள்'!!!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Ajith | Aug 04, 2020 08:17 PM

நார்த் வேல்ஸ் பகுதியை சேர்ந்த ஜோனாதன் ஸ்டீவன்ஸ் என்பவர் தனது குழந்தைகளுடன் கடற்கரைக்கு சென்றுள்ளார். அப்போது அவரின் இரண்டு குழந்தைகள் லேசி (12) மற்றும் ஜாக்(11) ஆகிய இருவரும் கடலில் விளையாடிக் கொண்டிருந்தனர்.

North wales heroic father saves his children from waves and died

அப்போது திடீரென வந்த ராட்சச அலை, ஸ்டீவன்ஸ் குழந்தைகள் இரண்டு பேரையும் கடலுக்குள் இழுத்துச் சென்றுள்ளது. இதனைக் கண்டு பதறிப் போன ஸ்டீவன்ஸ், உடனடியாக கடலுக்குள் இறங்கி குழந்தைகளை காப்பாற்றிக் கொண்டு பாதுகாப்பான இடத்திற்கு வந்து சேர்ந்துள்ளார்.

ஆனால், மறுக்கணமே எதிர்பாராமல் வந்த அடுத்த அலை ஜோனாதனை இழுத்துச் சென்றுள்ளது. இதனை கரையில் இருந்து கண்ட அவரின் இரண்டாவது மகள், அங்கிருந்தவர்களிடம் என் தந்தையை காப்பாற்றுங்கள் எனக் கூறி கதறியுள்ளார். அவர்கள் உடனடியாக கடலுக்குள் சென்று, ஜோனாதனை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். அப்போது அவர் உயிரிழந்தது போலவே காணப்பட்டாராம்.

இறந்தது போலவே இருந்த ஜோனாதன் திடீரென கண்ணைத் திறந்து, தனது மூன்று குழந்தைகளையும் ஒரு முறை பார்த்து புன்னகைத்து விட்டு மீண்டும் நினைவிழந்து விட்டார். உடனடியாக அவருக்கு முதலுதவி கொடுக்கப்பட்ட போதும், ஜோனாதனை காப்பாற்ற முடியாமல் போயுள்ளது.

ஜோனாதனின் இளைய மகள், தந்தை தனது கடைசி பலத்தை சேர்த்து, பிள்ளைகள் உயிரோடு இருக்கிறார்கள் என்பதை உறுதி செய்து விட்டு கண் மூடியிருக்கலாம் என உருக்கத்துடன் தெரிவித்துள்ளார். தனது உயிரை பயணம் வைத்து, குழந்தைகளை காப்பாற்றிய தந்தையின் ஹீரோயிக் செயலை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

மற்ற செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. North wales heroic father saves his children from waves and died | World News.