'ஜாலியா எடுத்த செல்ஃபி'... 'இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி போட போட்டோவை பார்த்த இளம்பெண்'... இதயத்துடிப்பை எகிற வைத்த காட்சி!
முகப்பு > செய்திகள் > உலகம்ஒரே ஒரு செல்ஃபி இளம்பெண் ஒருவரின் மொத்த தூக்கத்தையும் கலைத்து விட்டது என்றே சொல்லலாம்.
இங்கிலாந்தில் Coventry என்ற இடத்தில் உள்ள, ஒரு அடுக்கு மாடிக் குடியிருப்பில் வசித்து வருபவர் Rebecca Glassbrow. இவரது மற்றொரு தோழி ஒருவர் அவரது வீட்டின் கீழே வசித்து வருகிறார். இந்நிலையில் இவர்கள் இருவரின் தோழிகள் சிலர் பல நாட்களுக்குப் பிறகு வீட்டிற்கு வந்த நிலையில் அவர்களுடன் அரட்டை அடித்துக் கொண்டு இருந்துள்ளார்கள்.
பின்னர் தோழிகள் அனைவரும் சேர்ந்து ஒன்றாக செல்ஃபி எடுத்து கொண்டனர். செல்ஃபி எடுத்த போட்டோவை இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி போடலாம் என Rebecca பார்த்தபோது தான் அவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. புகைப்படத்தில், எட்டாவதாக ஒரு இளம்பெண், நீண்ட கருமை நிற கூந்தலை விரித்துப் போட்டுக்கொண்டு நிற்பதைக் கண்ட Rebecca ஒரு நிமிடம் மூச்சு, பேச்சில்லாமல் நின்று போனார்.
ஏற்கனவே அந்த குடியிருப்பிலுள்ள குளியலறைத் தொட்டி ஒன்றில் ஒருவர் இறந்துபோனதாக அரசல் புரசலாகக் கேள்விப்பட்டிருந்த நிலையில், இப்படி ஒரு பெண்ணின் முகத்தைப் புகைப்படத்தில் கண்டதிலிருந்து Rebeccaவுக்கு தூக்கமே வரவில்லை. நிச்சயம் இந்த வீட்டில் ஏதோ ஒரு அமானுஷ்ய சக்தி இருப்பதாக அவர் நம்புகிறார்.
இதற்கு முன்பு அந்த வீட்டில் அவ்வப்போது ஏதாவது சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும். ஆனால், அது அடுக்கு மாடிக் குடியிருப்பு என்பதால், அக்கம் பக்கத்து வீடுகளில் இருப்பவர்கள் எழுப்பும் சத்தம் என்று அதை நாங்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால், இப்போது உண்மையாகவே அந்த சத்தம் அக்கம் பக்கத்து வீடுகளில் இருப்பவர்கள் எழுப்பும் சத்தம்தானா என்பதே சந்தேகமாகிவிட்டது திகில் கலந்த பயத்துடன் கூறியுள்ளார் Rebecca.