“என்னால இனி சமாளிக்க முடியாது.. கடவுள்ட்ட போறேன்!”.. கேலிக்கும் கிண்டலுக்கும் பலி ஆன சிறுவன்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Siva Sankar | Feb 25, 2020 09:29 AM

சவுத் வேல்ஸில் உள்ளடோனிரிஃபைல் எனும் பகுதியைச் சேர்ந்த ஜூலி ஸ்டியூவர்ட் என்பவரின் 15 வயது மகன் சைமன் ப்ரூக்ஸ் தொடர் கிண்டல், கேலிகளுக்கு ஆளானதால் மனமுடைந்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். ஆனால் அவர் காப்பாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னரும், அதற்கெல்லாம் பலனின்றி 2014-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1-ம் தேதி மரணமடைந்தார்.

mom becomes activist against bullying after her sons suicide

அதன் பின் ஜூலி குழந்தைகள் நல செயல்பாட்டாளராக பணியாற்றி வரும் சூழலில், தற்போது தன் மகன் பற்றி பேசியுள்ளார். கேலி, கிண்டல், துன்புறுத்துல்களுக்கு எதிரான கருத்தரங்கங்களை நடத்தி வரும் ஜூலி,  “சைமன் அழகான, சுறுசுறுப்பான, உணர்வுபூர்வமான ஒருவன். சமூக சூழல் புரியாவிட்டாலும் நல்ல மனிதனான அவனுக்கு நண்பர்கள் வட்டம் இருந்தது. இருந்தும் தொடக்கத்தில் இருந்தே பட்டப் பெயர்கள் சொல்லி அழைக்கப்படுவது, தன் புத்தகங்கள் திருடப்படுவது என தொடங்கி, உயர்நிலைப் படிப்பின்பொது உடல் ரீதியான துன்புறுத்தல்களையும் எதிர்கொண்டான். வாழ்க்கையை மிகவும் விரும்பிய அவனால் கிண்டல், கேலிகளிலிருந்து தப்ப முயலவில்லை. இவற்றில் இருந்து தப்பிக்க, தன் வாழ்க்கையை முடித்துக்கொண்டான். ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமை இரவும், அடுத்த நாள் பள்ளி செல்ல விருப்பமில்லாமல் அழுவான். இறப்பதற்கு முன்பு, `ஏன் எல்லாரும் இப்படி பண்றாங்க? நான் சாக போறேனா?’என்று கேட்டவன்.  மேடைப்பேச்சுக்கு அழைத்தால் முதல் ஆளாக வந்து நிற்பான்” என்று உருகிப் பேசியுள்ளார்.

கடந்த 2014-ஆம் ஆண்டு பள்ளியில் இருந்து சீக்கிரமாகவே வீடு திரும்பிய சைமன், “என்னால் இனியும் சமாளிக்க முடியாது. நான் கடவுள் கிட்ட போறேன்” என தன் நண்பனுக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். இது தெரிந்ததும்  ஜூலி வீட்டுக்கு வர முயற்சிக்க, அதற்குள் மாத்திரைகளை உட்கொண்டுவிட்டார் சைமன். அதன் பிறகு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அப்போது, தான் செய்தது முட்டாள்தனம் என்றும் தான் இறக்க விரும்பவில்லை என்றும் சைமன் வருந்தியுள்ளார். ஆனால் தாயின் நம்பிக்கைக்கு பலனின்றி அடுத்த 2 நாட்களில் சைமன் உயிரிழந்தார். சைமன் இறந்தது முதல் 18 மாதங்கள் முடங்கிக் கிடந்திருந்த ஜூலி, சைமனின் நிலை யாருக்கும் உண்டாகக் கூடாதென்று வெளியில் வந்து குழந்தைகளுக்கு எதிரான துன்புறுத்தல்கள் சார்ந்த கேலி, கிண்டல்களுக்கு எதிரான விழிப்புணர்வுகளை வழங்கி வருகிறார்.

Tags : #BULLYING