‘நின்றுப்போன இதயத் துடிப்பு’... 'இறந்துவிட்டதாக அறிவித்த டாக்டர்கள்’... ‘உயிர்பிழைத்த இளைஞன்'!
முகப்பு > செய்திகள் > உலகம்By Sangeetha | Jun 26, 2019 03:51 PM
அமெரிக்காவில் இறந்ததாக அறிவிக்கப்பட்டு 20 நிமிடங்களுக்குப் பின்னர், 20 வயதான இளைஞர் ஒருவர் உயிர்பிழைத்த அதிசயம் நடந்துள்ளது.
மிச்சிகனின் லிவோனியாவைச் சேர்ந்தவர் 20 வயதான மைக்கேல் ட்ரூட். இவர் தனது 2-வது தந்தையுடன் வீட்டில் வேலை செய்துகொண்டிருந்தார். அப்போது, இரும்பு ஏணியில் ஏறும்போது, மேலே சென்ற மின்சார வயர் பட்டதில் ஷாக் அடித்தது. இதையடுத்து உடனடியாக அவசர எண்ணுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அவருக்கு முதலுதவி அளித்தப்பின்னர், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
பின்னர் உயிருக்குப் போராடிய மைக்கேலுக்கு தீவிர சிகிச்சைகள் வழங்கப்பட்டன. ஆனால் அவர் உடலிலிருந்து எந்தவித அசைவும் இல்லாததை அடுத்து சிகிச்சை பலனின்றி, மைக்கேலின் இதயம் செயல்பாட்டை இழந்து நின்று போனதாக மருத்துவர்கள் கூறினர். மேலும் மைக்கேல் இறந்துவிவிட்டதாக அறிவித்து, அவரது உடலிலிருந்து உயிர் காக்கும் கருவிகளை மருத்துவர்கள் அகற்றினர்.
இந்நிலையில் 20 நிமிடங்களுக்குப் பின் திடீரென மைக்கேலுக்கு, இதயத்தில் துடிப்பு வந்தது. அப்போது அவர் படுக்கவைக்கப்பட்டிருந்த கட்டிலும் குலுங்கியதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அதிசயமாக மைக்கேலின், இதயம், மூளை செயல்பாடுகளில் எந்த பாதிப்பும் இல்லை என்றும், ஷாக் அடித்த பாதிப்பில் பாதங்கள் தான் மறத்துப் போயிருந்ததாகவும் கூறினர்.
"It doesn’t matter what you think should happen at that point. You just are going to do everything you can," says Dr. Angel Chudler of @BeaumontHealth Farmington Hills. She's one of the physicians who brought a 20-year-old back to life, after 20 minutes without a heart beat. pic.twitter.com/x0DFenvL7F
— Jenn Schanz (@JennSchanzWXYZ) June 24, 2019