"ஆச ஆசையா பிஎஸ் 5 ஆர்டர் பண்ணா... 'பார்சல்'ல என்ன வந்துருக்குன்னு பாருங்க சார்..." ஷாக்கான 'இளைஞர்'!!!..
முகப்பு > செய்திகள் > உலகம்சோனி நிறுவனத்தின் கேமிங் கன்சோலான பிஎஸ் 5 கடந்த நவம்பர் மாதம் 12 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியிடப்பட்ட நிலையில், உலகெங்கிலுமுள்ள கேம் ஆர்வலர்களிடம் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது.

அதே வேளையில், கேம் ஆர்வலர்கள் அதிகம் பேர் இதனை வாங்க முற்பட்டு வருவதால் சில நாடுகளில் தட்டுப்பாடும் ஏற்படுகிறது. இதனால், இரு மடங்கு விலை கொடுத்தாவது பிஎஸ் 5 கேம் கன்சோலை வாங்கி விட பலர் முயன்று வருகின்றனர்.
இந்நிலையில், யு.எஸ் நாட்டின் உட்டா என்னும் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஆன்லைன் மூலம் பிஎஸ் 5 கேம் கன்சோலை ஆர்டர் செய்துள்ளார். கிட்டத்தட்ட நிர்ணயித்த விலையை விட இரு மடங்கு அதிக விலை கொடுத்து அந்த இளைஞர் ஆர்டர் செய்திருந்த நிலையில், அவரது வீட்டிற்கு வந்த பார்சலில் பிஎஸ் 5-க்கு பதிலாக செங்கல் இருந்தது. ஆசையாக காத்திருந்த இளைஞர் பார்சலுக்குள் செங்கல் இருப்பதைக் கண்டு அதிர்ந்து போயுள்ளார்.
உடனடியாக, போலீசாரின் உதவியை அவர் நாடியுள்ள நிலையில், போலீசார் அந்த இளைஞரிடம் தான் ஆர்டர் செய்த ஆன்லைன் நிறுவனத்திடம் இருந்து பணத்தை திரும்பப் பெற முயற்சி செய்ய அறிவுறுத்தியுள்ளனர். கேமிங் மீது அதிகம் அடிமையாக இருந்த இளைஞர், பிஎஸ் 5 கேமிங் கன்சோல் வாங்க முற்பட்டு அதிக பணத்தை இழந்து பரிதவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
