'பெண்ணுக்கு வந்த பிரசவவலி'... 'ஒரே பிரசவத்தில் இத்தனை குழந்தைகளா?'.... ஆச்சரியத்தில் ஒட்டுமொத்த மருத்துவ உலகம்!
முகப்பு > செய்திகள் > உலகம்இளம்பெண்ணுக்கு நடந்த பிரசவம் மருத்துவ உலகை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
மேற்கு ஆப்ரிக்காவில் அமைந்துள்ள மாலி குடியரசு நாட்டை சேர்ந்தவர் 25 வயதான ஹலிமா சிஸ். கர்ப்பமாக இருந்த இவர் வடக்கு ஆப்ரிக்காவில் உள்ள மொரோக்கோவில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். சிசேரியன் முறையில் அவருக்குப் பிரசவம் நடந்த நிலையில், ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகளை ஈன்றெடுத்துள்ளார்.
மொத்தம் 5 பெண் மற்றும் 4 ஆண் என் ஒன்பது குழந்தைகள் பிறந்துள்ளனர். அவரது உடல் நலனில் அக்கறை செலுத்தும் வகையில் மாலி அரசு அவருக்கு மொரோக்கோ நாட்டு மருத்துவர்கள் உடன் இணைந்து சிகிச்சை கொடுத்து வருகின்றனர். அவர் கருவுற்ற பின் பரிசோதனைக்கு மருத்துவர்களை நாடி உள்ளார்.
அப்போது அவருக்கு ஸ்கேன் செய்ததில் அவருக்கு 9 குழந்தைகள் இருப்பதாகக் கண்டறிந்துள்ளனர். அதனால் அவருக்குச் சிறப்புக் கவனம் செலுத்திக் கவனித்து வந்துள்ளனர். முதலில் மாலியின் தலைநகரில் உள்ள மருத்துவமனையில் அவரை கவனித்து வந்த மருத்துவர்கள் பின்னர் மொரோக்கோவிற்கு பிறசாவத்திற்காகக் கொண்டு சென்றுள்ளனர். சில வாரங்களுக்குப் பின்னர் தாயும், சேய்களும் மாலிக்குத் திரும்புவார்கள் என அரசு தெரிவித்துள்ளது.
மிகவும் அரிதினும் அரிதாகத் தான் இந்த மாதிரியான பிரசவங்கள் நடைபெறுகிறது. இப்படிப் பிறக்கின்ற குழந்தைகள் சர்வைவ் ஆவதில் சிக்கல்கள் இருப்பதாகவும் மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். அது கவலை அளிக்கும் விஷயமாக அமைந்துள்ளது.