'எப்படி இந்த முடிவை எடுத்தார்'?... 'எந்த அமெரிக்க அதிபரின் மனைவியும் செய்யாத விஷயம்'... வாயடைத்து போகவைத்த ஜோ பைடனின் மனைவி!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவின் முதல் குடிமகனாக அதிபர் கருதப்படுவது போல, அவரது மனைவி முதல் குடிமகளாகக் கருதப்படுவார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மனைவி ஜில் பைடன், கல்லூரி மாணவ - மாணவியருக்கு மீண்டும் நேரிடையாக வகுப்புகளை எடுக்கத் துவங்கி உள்ளது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மனைவி ஜில் பைடன், வடக்கு வெர்ஜீனியா கம்யூனிட்டி கல்லூரியில் பேராசிரியையாக 2009 முதல் பணியாற்றி வருகிறார்.
தற்போது கொரோனா பரவல் காரணமாக அமெரிக்காவில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு வகுப்புகள் ஆன்லைனில் நடந்து வருகிறது. ஜில் பைடனும் ஆன்லைன் வழியாகவே பாடங்களை நடத்தி வந்தார். இந்நிலையில் அமெரிக்காவில் தற்போது கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன.
இதையடுத்து, வடக்கு வெர்ஜீனியா கல்லூரிக்கு நேற்று சென்று மாணவ - மாணவியருக்கு ஜில் பைடன் வகுப்புகளை எடுத்தார். அமெரிக்க அதிபராக இதற்கு முன் இருந்தவர்களின் மனைவியர் யாரும், வேறு எங்கும் வேலைக்குச் சென்றதில்லை. அமெரிக்க அதிபராக இருந்த புஷ்ஷின் மனைவி லாரா, கணவர் அதிபர் ஆனதும் துவக்கப் பள்ளி ஆசிரியர் பணியை ராஜினாமா செய்துவிட்டார்.
அமெரிக்க அதிபராக இருந்த பில் கிளின்டனின் மனைவி ஹிலாரி, ஒபாமாவின் மனைவி மிச்செல் ஆகியோர் சமூக சேவைகளில் ஆர்வம் காட்டி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.