VIDEO: கூகுள் பே-ல MONEY TRANSFER பண்ண கட்டணமா...? - விளக்கம் அளித்த கூகுள் பே நிறுவனம்...!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Behindwoods News Bureau | Nov 26, 2020 11:01 PM

அமெரிக்காவை அடித்தளமாக கொண்ட கூகுள் பே செயலியானது, முதன் முதலில் இணையதளம் மூலம் பணம் பரிமாற்றம் செய்யும் முறையை அறிமுகப்படுத்தியது. அதுமட்டுமில்லாமல் கூகுள் பே செயலி வழியாகப் பணப்பரிமாற்றம் செய்ய எந்தக் கூடுதல் கட்டணமும் கிடையாதென்பதாலும், இது கூகுள் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ளதென்பதாலும் பலரது விருப்பத்திற்கும், நம்பிக்கைக்கும் உரிய செயலியாக இருந்து வருகிறது.

Google Pay Company explanation pay for the transfer

இந்த நிலையில், ஜனவரி மாதம் முதல் கூகுள் பே தளம் செயல்படாது என அதன் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், கடந்த சில தினங்களாகவே கூகுள் பே நிறுவனம் தன்னுடைய இலவச சேவையை நிறுத்தவுள்ளது என்றும் இனி பணப்பரிமாற்றத்திற்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் செய்திகள் வெளியாகின.

இந்த அறிவிப்பு குறித்து விளக்கியுள்ள கூகுள் பே நிறுவனம், 'அமெரிக்காவில் முதன்முதலாக அறிமுகம் செய்யப்பட்ட கூகுள் பே செயலி மட்டுமே தற்போது  நிறுத்தப்பட்டுள்ளது. கூகுள் பே பயனாளர்கள் புதிய கூகுள் பே செயலியை ப்ளே ஸ்டோரில் இருந்து டவுன்லோட் செய்து அதைப் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் தற்போதய அறிவித்துள்ள கட்டணம்  என்பது அமெரிக்காவிற்கு மட்டுமே பொருந்தும். இந்தியாவில் இந்த வசதியைத் தொடர்ந்து இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்' என அதன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : #GOOGLEPAY

மற்ற செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Google Pay Company explanation pay for the transfer | World News.