'டமார் என கேட்ட சத்தம்'... 'மொத்தமாக இருளில் மூழ்கிய 3,00,000 குடியிருப்புகள்'... 'மொத்தத்துக்கும் காரணம் இதுவா'?... நொந்து நூடுல்ஸ் ஆன அதிகாரிகள்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Jeno | Sep 15, 2021 09:14 PM

திடீரென்று ஒரு நகரமே மின்சாரம் துண்டிக்கப்பட்டு ஸ்தம்பித்துப் போனதற்கு ஒரு பலூன் தான் காரணம் என்ற தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

Culprit is anybody\'s gas as balloon causes blackout in Germany

ஜெர்மனியின் டிரெஸ்டன் (Dresden) நகரில் திங்கட்கிழமை மதியத்திற்கு மேல் திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் மொத்த நகரமே அரண்டு போனது. சுமார் 3,00,000 குடியிருப்புகள், மருத்துவமனைகள், நிறுவனங்கள் எனப் பல பகுதிகள் பாதிக்கப்பட்டது. அதோடு போக்குவரத்து விளக்குகள், டிராம் போக்குவரத்து என மொத்தமும் செயலிழந்து போனது.

Culprit is anybody's gas as balloon causes blackout in Germany

இதையடுத்து தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவினருக்குப் பொதுமக்கள் தொடர்ந்து புகார் அளித்த வண்ணம் இருந்தனர். ஆனால் ஒரு சில நிமிடங்களில் சில பகுதிகளில் மின்சாரம் திரும்பிய நிலையில், 2 மணி நேரத்தில் மொத்தமாக சீரடைந்தது என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த மின்சார துண்டிப்பிற்கு என்ன காரணம் எனத் தெரியாமல் அதிகாரிகள் திணறிய நிலையில், இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டார்கள்.

Culprit is anybody's gas as balloon causes blackout in Germany

இந்த விசாரணையில் மின்சார துண்டிப்பிற்குக் காரணம் ஒரு பலூன் எனத் தெரிய வந்ததால் போலீசார் அதிர்ந்துபோனார்கள். பலூனில் சுற்றப்பட்டிருந்த உலோகம் பூசப்பட்ட பகுதி மின்சாரம் பகிர்ந்தளிக்கும் முக்கிய பகுதியில் மோதியதாலையே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது. ஆனால் இது திட்டமிட்ட செயலா அல்லது தற்செயலாக நடந்ததாக என்பது குறித்து போலீசார்  விசாரணை செய்து வருகிறார்கள்.

Tags : #ERMANY

மற்ற செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Culprit is anybody's gas as balloon causes blackout in Germany | World News.