'எங்களை எதிர்க்க நினைச்சா'... 'கனவுல கூட இது நடக்காது'... 'முன்னாள் துணை அதிபரின் சகோதரருக்கு நேர்ந்த கொடுமை'... தாலிபான்கள் அட்டூழியம்!
முகப்பு > செய்திகள் > உலகம்ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆட்சி அதிகாரத்தைத் தாலிபான்கள் கைப்பற்றியுள்ளார்கள்.

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய நிலையில், அதிகாரத்தை தாலிபான்கள் கைப்பற்றினர். அதிபராக இருந்த அஷ்ரஃப் கனி நாட்டைவிட்டு வெளியேறிய நிலையில், துணை அதிபராக இருந்த அம்ருல்லா சாலே, தாமே அதிபர் எனக் கூறியிருந்தார். மேலும், அவரது தலைமையிலான தேசிய கிளர்ச்சிப் படை, பஞ்ச்ஷிர் பகுதியில் தாலிபான்களை எதிர்த்துப் போராடி வந்தது.
இந்த நிலையில் அம்ருல்லா சாலேவின் மூத்த சகோதரரான ரோகுல்லா சாலேவை தாலிபான்கள் சிறைபிடித்தனர். பின்னர் அவரை சித்ரவதை செய்து கொலை செய்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவித்து உள்ளன. அதேநேரம், சில நாட்களுக்கு முன்னரே பஞ்ச்ஷீர் மாகாணத்தில் தாலிபான்களுக்கு எதிராக நடந்த சண்டையில் ரோகுல்லா கொல்லப்பட்டதாக அந்த மாகாணவாசி ஒருவர் தெரிவித்து உள்ளார்.
முன்னதாக அஷ்ரஃப் கானி தலைமையிலிருந்த ஆப்கான் அரசில் தேசியப் பாதுகாப்பு இயக்குநரகத்தின் தலைவராக இருந்தவர் ரகுலா சாலே. இவரைத் தான் இப்போது தாலிபான்கள் கொடூரமாகச் சித்திரவதை செய்து கொலை செய்துள்ளனர். ரோகுல்லா சாலேவின் உடலை உறவினர்களிடம் அளிக்க மறுத்த தாலிபான்கள் அவரது உடல் அழுக வேண்டும் என்றும் தெரிவித்தாக கூறப்படுகிறது.

மற்ற செய்திகள்
