ஆத்தாடி எவ்ளோ பெரிய GOLD FISH.. வாயை பிளந்த நெட்டிசன்கள்.. வைரல் ஃபோட்டோஸ்!!
முகப்பு > செய்திகள் > உலகம்பரந்து விரிந்து கிடக்கும் கடல் நீரை பார்க்கும் போது அதன் அருகே சென்று கொஞ்ச நேரம் மனதை அலைபாய விட வேண்டும் என தோன்றும்.
மேலும் கடல் நீரில் கால் நனைத்து கடற்கரை ஓரம் நேரத்தை கழிக்க வேண்டும் என்றும் பலரும் நினைப்பார்கள். எந்த அளவுக்கு கடல் அருகே இருப்பது புத்துணர்ச்சி தருமோ அதே அளவுக்கு கடலுக்குள் ஏராளமான ஆச்சரியங்கள் மற்றும் நம்மை மிரள வைக்கும் விஷயங்கள் புதைந்து கிடக்கிறது.
அவ்வப்போது உலகில் உள்ள பல இடங்களில் கடல் நீருக்கு அடியில் இருந்து ஏராளமான அரிய வகை உயிரினங்கள் ஆராய்ச்சியாளர்கள் அல்லது பிறர் கண்ணில் படும் செய்திகளை நிறைய நாம் கேள்விப்பட்டிருப்போம்.
அப்படி சிக்கும் மீன் அல்லது உயிரினங்கள் குறித்த தகவல் நமக்கு தெரிய வரும் போது ஒருவித பிரம்மிப்பை கூட உருவாக்கும். அப்படி ஒரு செய்தி தான் தற்போது இணையத்தில் அதிகம் ரவுண்டு அடித்து வருகிறது. பிரிட்டனை சேர்ந்தவர் 42 வயதான Andy Hackett. இவர் பிரான்சின் ஷாம்பெயின் என்ற நகரில் உள்ள ப்ளூ வாட்டர் ஏரிகளில் மீன் பிடித்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது கோல்டு ஃபிஷ் ஒன்று பிடிபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
பொதுவாக கோல்டு ஃபிஷ் என்றால், சிறிய சைஸில் தான் இருக்கும் என நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், ஆண்டி ஹேக்கட் பிடித்த தங்க மீன், சுமார் 30.5 கிலோ எடை இருந்துள்ளது. இதற்கு முன்பு கடந்த 2019 ஆம் ஆண்டு அமெரிக்காவில் கிடைத்த தங்க மீன் தான் உலகின் மிகப் பெரிய தங்க மீனாக கருதப்பட்டு வந்தது. அப்படி இருக்கையில், தற்போது கிடைத்த தங்க மீன், அதனை விட சுமார் 13 கிலோ அதிகமாக உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
இவ்வளவு பெரிய தங்க மீன் அங்கே இருப்பது முன்பே தான் அறிந்து இருந்ததாகவும் ஆனால் அதை பிடிப்பேன் என நினைக்கவில்லை என்றும் ஆண்டி ஹேக்கட் தெரிவித்துள்ளார். மேலும் இந்த மீனை துரத்தி பிடிக்க 25 நிமிடங்கள் எடுத்துக் கொண்ட அவர், அதை பிடித்தது தனது அதிர்ஷ்டம் என்றும் கூறுகிறார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் அதிகம் வைரலாகி, 30 கிலோ எடை கொண்ட கோல்டு ஃபிஷ் இருப்பதை அறிந்து பலரும் வியந்து போயுள்ளனர்.