கிழிஞ்ச ஜீன்ஸ் பாத்திருப்போம்.. இப்படி ஒரு ஷூ-வை பாத்திருக்கீங்களா?.. இதுதான் இப்போ அந்த நாட்டுல ஃபேஷனாம்.. விலையை கேட்டா ஆடிப்போய்டுவீங்க..!
முகப்பு > செய்திகள் > உலகம்முழுவதும் கிழிந்த ஷூக்களை ஸ்பெஷல் ஆஃபரில் விற்க இருப்பதாக அறிவித்துள்ளது முன்னணி ஷூ தயாரிப்பு நிறுவனமான Balenciaga. இது சமூக வலை தளங்களில் பெரும் விவாதங்களை கிளப்பியுள்ளது.
Also Read | சாப்பாட்டு பந்தி Open பண்ணதும் உறவினர்கள் செய்த காரியம்.. கல்யாண வீட்ல நடந்த ருசிகரம்.. வைரலாகும் வீடியோ..!
ஷூ
முன்னொரு காலத்தில் மேற்க்கத்திய நாடுகளில் ஷூ அணிவது அவர்களின் பண்பாட்டு அடையாளமாக கருத்தப்பட்டு வந்தது. ஆனால், தற்போது உலகமெங்கிலும் உள்ள மக்கள் ஷூ அணியும் வழக்கத்திற்கு வந்துவிட்டனர். தொழில்நுட்ப வளர்ச்சியும் சமூக விரிவாக்கமும் பல்வேறு விதத்தில் நம்முடைய அன்றாட பொருட்கள் மீது ஆதிக்கம் செலுத்தியுள்ளன. அந்த வகையில் ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு மாதிரியான உடைகள், ஆடை அணிகலன்கள், காலணிகளை மனிதர்கள் பயன்படுத்திவருக்கின்றனர்.
இந்நிலையில் ஸ்பெயினை சேர்ந்த ஒரு ஆடை அலங்கார பொருட்கள் தயாரிப்பு நிறுவனம் புதிய ஆஃபர் ஒன்றினை அறிவித்துள்ளது.
முழுவதும் சேதமடைந்த ஷூ
ஸ்பெயினை சேர்ந்த டிசைனரான கிறிஸ்டபோல் பெலன்சியாகா என்பவரால் துவங்கப்பட்ட பெலன்சியாகா ஆடை அலங்கார பொருட்கள் தயாரிப்பு நிறுவனம் தனது தனித்துவமான அணிகலன்களுக்கு பெயர்போனது. இந்த நிறுவனம் தற்போது 'முழுவதும் சேதமடைந்த ஷூ' என்னும் வகையில் பிரத்யேக 100 ஜோடி ஷூக்களை மக்களுக்கு அறிமுகப்படுத்தி இருக்கிறது. பெயருக்கு ஏற்றாற்போல, முழுவதும் கிழிந்து, ஆங்காங்கே பிளவுபட்டு இருக்கும் இந்த ஷூக்கள் தரத்தின் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. அதாவது அதிகமாக கிழிந்திருந்தால் கூடுதல் விலையாம்.
495 அமெரிக்க டாலர்கள் துவங்கி 1,850 டாலர்கள் (இந்திய மதிப்பில் 1.44 லட்சம் ரூபாய்) வரையில் இந்த கிழிந்த ஷூக்கள் விற்கப்பட்டு வருகின்றன.
100 ஜோடி
பாரிஸ் ஸ்னீக்கர் கலெக்ஷன்ஸ் (Paris Sneaker collection) என்னும் தலைப்பில் விற்பனைக்கு வந்துள்ள இந்த ஷூக்களில் இரண்டு மாடல்கள் மட்டுமே இருக்கிறதாம். எண்ணிக்கையை பொறுத்தவரையில் இரண்டு மாடல்களில் மொத்தம் 100 ஷூக்களை மக்களுக்கு அறிமுகம் செய்திருக்கிறது இந்த நிறுவனம்.
பெலன்சியாகாவின் இந்த புதிய முழுவதும் சேதமடைந்த ஷூ மாடல் ஃபேஷன் உலகையே திரும்பிப்பார்க்க வைத்திருக்கிறது. மேலும் இதுகுறித்த முழு தகவல்கள், சிறப்பம்சங்களை தனது அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் வெளியிட்டுள்ளது இந்த நிறுவனம். இந்நிலையில், இந்த ஷூக்களின் புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8