'போட்டோ' அப்லோடு பண்ணியே,,.. 'மாசம்' 3 லட்சம் வர 'மனுஷன்' சம்பாதிக்கிறாராம்..,, அப்படி என்ன தான்யா இருக்கு அந்த 'போட்டோ'ல,,.. குமுறும் 'நெட்டிசன்கள்'!!!
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா தொற்று காலகட்டம் என்பதால் பல கோடி மக்கள் உலகளவில் வேலையிழந்து தவித்து வருகின்றனர். இத்தகைய காலகட்டங்களில், தங்களின் நிதி நெருக்கடியை சமாளிக்க பலர் ஆன்லைன் வழிகளை தேர்ந்தெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், அமெரிக்காவின் அரிசோனா என்னும் பகுதியை சேர்ந்த 35 வயதான ஜாசன் ஸ்டாம் என்பவர் தனது காலின் புகைப்படங்களை மட்டுமே பகிர்ந்து மாதம் 4,000 டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 3 லட்சம்) வரை சம்பாதிக்கிறாராம்.
ஆண்கள், பெண்கள் என அனைவருக்கும் ஜாசன் தனது காலின் புகைப்படங்களை பகிர்ந்து அதற்கான பணத்தையும் பெற்று வருகிறார். அதே போல, இன்ஸ்டாவிலும் தனது காலின் புகைப்படங்களை மட்டும் பகிரும் ஜாசன், அந்த பக்கத்தில் சுமார் 50,000 ஃபாலோவர்களை வைத்துள்ளார்.
அது மட்டுமில்லாமல் onlyfans என்ற இணையதளம் மூலமும் அவர் பணம் சம்பாதித்து வருகிறார். இதுகுறித்து ஜாசன் கூறுகையில், 'எனது ரசிகர்களுக்கு பாதங்களின் மீது இனம் புரியாத ஈர்ப்பு உள்ளது. அதே போல, அவர்கள் எனக்கு பொருளாதார ரீதியில் உதவுவதற்கு காரணம், இது போன்ற புகைப்படங்களை வேறு எந்த இணையதளங்களிலும் காண முடியாது என்பதால் தான். அவர்களை போல எனக்கும் பாதங்கள் மீதான ஈர்ப்பு இருப்பதால் தான் அவர்களின் மனதை புரிந்து கொள்ள முடிகிறது' என்கிறார்.
அவரது இந்த செயலுக்கு அவரின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் எந்த எதிர்ப்பையும் காட்டவில்லை என ஜாசன் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
