'ஏலியன்' இருக்கா இல்லையா...? அதை பாக்க முடியுமா? முடியாதா...? 'விண்வெளி' வீராங்கனையின் 'திகில்' விளக்கம்...

முகப்பு > செய்திகள் > உலகம்

By Suriyaraj | Jan 09, 2020 06:04 PM

ஏலியன்கள் பூமியில் வாழ்ந்துகொண்டிருக்கலாம்; ஆனால் அவை நம் கண்ணுக்கு புலப்படாமல் இருக்கலாம் என பிரிட்டனின் முதல் விண்வெளி வீராங்கனை தெரிவித்துள்ளார்.

Aliens may be invisible - British astronaut Description

விஞ்ஞானமும் அறிவியலும்  எவ்வளவோ வளர்ச்சி அடைந்திருந்தாலும், மனித அறிவுக்கு எட்டாத பல்வேறு விஷயங்கள் உலகில் இருக்கத் தான் செய்கின்றன.  பல அமானுஷ்யமான விஷயங்கள் இன்னும் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என்றாலும், அவற்றை முழுவதுமாக புறக்கணிக்கவும் நவீன அறிவியலால் முடியவில்லை என்பதே உண்மை.

அந்தவகையில் UFO (Unidentified flying object) எனப்படும் அடையாளம் கண்டுபிடிக்க முடியாத பறக்கும் பொருள்கள்  குறித்தும், அவ்வப்போது அவற்றில் தோன்றி மறையும் ஏலியன்கள் குறித்தும் பலரும் பல்வேறு கருத்துக்களை கூறி வருகின்றனர். சாமானியர்கள் பலரும் இதுகுறித்து கருத்து தெரிவித்திருந்தாலும் சில சமயங்களில் அறிவியல் அறிஞர்கள், விண்வெளி வீரர்கள் உள்ளிட்டோரும் கருத்து தெரிவிப்பதை நம்மால் எளிதில் கடந்து சென்றுவிட முடியாது.

எகிப்திய கல்வெட்டுகளிலும், இந்திய பழங்கால கோவில்களிலும் பல்வேறு சிலைகள் பறக்கும் தட்டுகளையும், ஏலியன்களையும் குறிப்பதைப் போன்று உள்ளதை ஆய்வாளர்கள் ஆவணப்படுத்தியிருக்கிறார்கள். இன்னும் ஒரு படி மேலே போய் பழங்குடியினத்தவர்கள் பலர் ஏலியன்களையே கடவுள்களாக வணங்கி வருவதாகவும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இந்தியாவிலும் கூட சென்ற நூற்றாண்டில் பறக்கும் தட்டு தோன்றியிருப்பதாக கூறப்படுகிறது. 1954ம் ஆண்டு பீகார் மாநிலத்தில் மான்பும் என்ற இடத்தில் 12 அடி நீளமும், சாம்பல் நிறமும் கொண்ட பறக்கும் தட்டு தோன்றியதாகக் கூறப்படுகிறது. பறக்கும் தட்டுகள் இருப்பது உண்மை என அமெரிக்க கப்பல்படை கடந்த ஆண்டு வீடியோ ஆதாரம் வெளியிட்டது.

இந்நிலையில், பிரிட்டனின் முதல் விண்வெளி வீராங்கனையான டாக்டர் ஹெலன் ஷார்மன், பூமியில் ஏலியன்கள் வாழ்ந்துகொண்டுதான் உள்ளன என்பதை உறுதிப்படுத்தியுள்ளார். ஆனால் அவை நம் கண்ணுக்கு புலப்படுவதில்லை என்றும் வேறு ஒரு பரிமாணத்தில் இங்கு வாழ்ந்து கொண்டிருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார் .

சமீபத்தில் செய்தியாளர்களிடையே பேசிய ஹெலன், ‘பிரபஞ்சத்தில் பில்லியன் கணக்கான நட்சத்திரங்கள் உள்ளன, அவைகளில் வெவ்வேறு விதமான வாழ்க்கை வடிவங்கள் இருக்க முடியும். பூமியில் உள்ள வாழ்க்கை முறை போன்று அங்கு இருக்காது. அந்த வேறுபாடுகள் ஏலியன்களை நம் கண்ணுக்கு புலப்படாதவர்களாக மாற்றக்கூடும் எனத் தெரிவித்துள்ளார்.

ஏலியன்கள் தற்போது இவ்வுலகிலேயே வாழ்ந்து கொண்டிருக்கலாம் என்றும், ஏலியன்கள் மனிதர்களைப் போன்று கார்பன் மற்றும் நைட்ரஜனால் உருவாக்கப்படாவிட்டாலும், அவர்கள் இப்போதே இங்கே இருக்கக்கூடும், அவர்களை நம்மால் பார்க்க முடியாது என்றும் கூறியுள்ளார்.

Tags : #ALIENS #INVISIBLE #BRITISH ASTRONAUT #DESCRIPTION