'FLIGHTல FOOTBOARD அடிச்சாவது போயிடலாம்'... 'AIRFORCE விமானத்தின் டயரில் ஏறிய மக்கள்'... நெஞ்சை பதறவைக்கும் காட்சிகள்!
முகப்பு > செய்திகள் > உலகம்ஆப்கானிஸ்தானில் தாலிபான்களிடம் இருந்து தப்பிக்க அமெரிக்க விமானத்தில் டயரில் தொங்கியபடி மக்கள் பயணித்த சம்பவம் உலக மக்களைப் பேரதிர்ச்சியில் தள்ளியுள்ளது.
அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதலுக்கு மூளையாக இருந்த அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவரான ஒசாமா பின் லேடனுக்கு அடைக்கலம் அளித்த குற்றத்துக்காக தலீபான்களுக்கு எதிராக அமெரிக்கா தனது ராணுவப் படைகளை 2001-ல் ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பி வைத்தது.
அமெரிக்கப் படைகளின் உதவியுடன் ஆப்கானிஸ்தான் அரசு தலீபான்களிடம் இருந்து நாட்டை முழுமையாக மீட்டது. தலீபான்கள் தோற்கடிக்கப்பட்டாலும் அவர்கள் முழுமையாக ஒழிக்கப்படவில்லை. தலீபான்களை முழுமையாக ஒழித்துக் கட்ட வேண்டும் என்பதில் அமெரிக்கா உறுதியாக இருந்ததால் தனது படைகளை அங்கேயே நிறுத்தி வைத்தது.
ஆனால் கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் ஆகியும் அமெரிக்கப் படைகளால் தலீபான்களை முழுமையாக ஒழிக்க முடியவில்லை. எனவே முடிவில்லாமல் நீண்டு கொண்டே செல்லும் இந்த போரிலிருந்து விலக அமெரிக்கா முடிவு செய்தது. அதன்படி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தலீபான் பயங்கரவாத அமைப்புடன் அமெரிக்கா ஒரு ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தியது.
அதில் ஆப்கானிஸ்தானில் பிற பயங்கரவாத அமைப்புகளுக்குப் புகலிடம் அளிக்க மாட்டோம் என தலீபான்கள் உறுதி அளித்ததைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானிலிருந்து தனது படைகளைத் திரும்பப் பெற அமெரிக்கா ஒப்புக்கொண்டது. அதன்படி கடந்த ஜூன் மாத பிற்பகுதியிலிருந்து அமெரிக்கப் படைகள் அங்கிருந்து வெளியேறி வருகின்றன.
90 சதவீத அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறிவிட்ட நிலையில், இதுவரை பதுங்கியிருந்த தலீபான்கள் தங்கள் வேலையைக் காட்டத் தொடங்கினார்கள். இதனால் தாலிபான்களுக்குப் பயந்து வெளிநாட்டவர்களும், சொந்த நாட்டவர்களுமே நாட்டை விட்டு வெளியேற முயன்று வருகின்றனர்.
இதன்காரணமாக அங்கிருந்து புறப்படும் சொற்ப விமானங்களில் ஏறி எப்படியாவது தப்பிப் பிழைத்து ஓடி விடலாம் எனப் பலர் முயன்று வருகிறார்கள். அந்த வகையில் ஆப்கானிஸ்தானிலிருந்து புறப்பட்ட அமெரிக்க ராணுவம் விமானம் ஒன்றைச் சுற்றி பலர் ஓடி வந்த நிலையில், அதன் டயரில் தொங்கியபடி பயணித்த 3 பேர் நடுவானில் குடிசைப்பகுதியில் விழுந்து பலியான சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
I mean those who have successfully climbed and hold on to the aircraft body may not last long when the Plane takes off! However, that’s how desperate they are to leave that country even if their lives are at stake!! #Afghanistan pic.twitter.com/DtqNdQ8Ovl
— DJ ALI (@Hisrath95) August 16, 2021