பெற்ற தாயைக் கொன்றுவிட்டு பிரதமரைக் கொல்லப் புறப்பட்ட கனடா நடிகர்.. காரணத்தை கேட்டு அதிர்ச்சியில் உறைந்த நீதிமன்றம்.!
முகப்பு > செய்திகள் > உலகம்தான் கஷ்டப்பட்டாலும் பிள்ளைகள் கஷ்டப்படக்கூடாது, பிள்ளைகளை கஷ்டப்படுத்த கூடாது, பிள்ளைகளுக்காக கஷ்டத்தை அனுபவிக்கலாம் என்று நினைக்கும் தாயார்கள்தான் உலகில் இருக்கும் பெரும்பாலானோர்.
ஆனால் தம்முடைய தாயை கொன்று விட்டு, அதற்கு இளம் நடிகர் ஒருவர் கூறியிருக்கும் காரணம் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த காரணத்தை கேட்டு உலக நாடுகள் முழுவதும் மக்கள் பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தாயைக் கொன்ற மறுநாளே, மூன்று துப்பாக்கிகள், மேலும் தோட்டாக்கள், கூடுதலான பெட்ரோல் குண்டுகள் உள்ளிட்டவற்றுடன் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை கொல்வவதற்காக புறப்பட்டிருக்கிறார் இளம் நடிகர். கடந்த 2020-ஆம் ஆண்டு, மார்ச் மாதம் 31-ஆம் தேதி, புகழ்பெற்ற திரைப்படங்கள் சிலவற்றில் நடித்த பிரபல கனேடிய நடிகரான ரியான் கிரந்தம் (Ryan Grantham) (வயது 24) என்பவர், தமது தாயாகிய பார்பரா வெய்ட்டி Barbara Waite ( வயது 64) என்பவரை, பின்னாலிருந்து தலையில் துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
அந்த சமயத்தில் ரியான் கிரந்தமின் தாயார், தம் வீட்டில் பியானோ வாசித்துக் கொண்டிருந்துள்ளார். ஆனால் தாயை கொன்றுவிட்ட குற்றவுணர்ச்சி திடீரென்று அவருக்கு எழுந்துவிட, பிரதமரை கொல்ல வேண்டும் என்கிற தன்னுடைய நோக்கத்தை கைவிட்டு விட்டு நேராக சென்று போலீசாரிடம் சரணடைந்து இருக்கிறார். இந்த நிலையில் இவர் பிரிட்டிஷ் கொலம்பியா உச்ச நீதிமன்றத்தில் தம்முடைய தாயை கொன்றதற்கான காரணத்தை நீதிபதி முன்பாக விளக்கியிருக்கிறார்.
அதன்படி, தாம் எடுத்துக்கொண்ட கமிட்மெண்ட்டிற்காக, தான் வன்முறைத் தனமாக நடந்துகொள்ள வேண்டியிருக்கும் என்றும், அதன் நிமித்தமாக தமது தாயாரை சித்ரவதை படுத்த வேண்டியிருக்கும், ஆனால் அதை அவர் பார்த்தால் மிகவும் கஷ்டப்படுவார், அதை தவிர்ப்பதற்காகவே அவரை கொன்றதாக பேசியிருப்பதாக சர்வதேச செய்தி தளங்களான நியூ யார்க் போஸ்ட், சிபிசி செய்தி தளம் ஆகியவை செய்திகளை வெளியிட்டுள்ளன.