இனிமேல் FREE எல்லாம் கிடையாது.. இந்த APP-ல் இருந்து மொபைல் ரீசார்ஜ் பண்றதுக்கு ‘கட்டணம்’ வசூல்.. வெளியான அதிரடி அறிவிப்பு..!
முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்ஆன்லைன் பரிவர்த்தனை நிறுவனமான போன் பே தங்களது வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தற்போதைய நவீன உலகில் பெரும்பாலானோர் ஆன்லைன் பரிவர்த்தனைகளை பயன்படுத்தி வருகின்றனர். உணவகம், மளிகைக் கடை என எங்கு சென்றாலும் ஆன்லைன் பரிவர்த்தனையைதான் பலரும் மேற்கொள்கின்றனர். மேலும் செல்போன், மின்சாரம் போன்ற கட்டணங்களையும் செல்போனில் இருந்தே செலுத்தி வருகின்றனர். இதற்காக கூகுள் பே, போன் பே, மற்றும் பேடிஎம் போன்ற செயலிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், போன் பே (PhonePe) செயலியில் இருந்து செல்போனுக்கு ரீசார்ஜ் செய்தால் கட்டணம் வசூலிக்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அதில், ரூ.50 முதல் ரூ.100 வரையிலான ரீசாஜ்களுக்கு 1 ரூபாயும், ரூ.100-க்கு மேலான ரீசார்ஜ்களுக்கு 2 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படும் என போன் பே நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே கிரெடிட் கார்டு மூலம் ரீசார்ஜ் செய்யப்படும்போது Processing fees என்ற செயலாக்க கட்டணம் வசூலிக்கப்படும் என சமீபத்தில் போன் பே அறிவித்தது. இந்த நிலையில் செல்போன் ரீசார்ஜ் செய்வதற்கு கட்டணம் வசூலிக்கப்படும் என போன் பே நிறுவனம் தெரிவித்தது வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.