'இது உலக லெவல்...' சுவீடன் பெண்ணை காதலித்த தமிழக இளைஞர்...! ஒண்ணு இல்ல, ரெண்டு இல்ல, மூணு 'டைப்'ல கல்யாணம்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருச்செங்கோட்டை சேர்ந்த இளைஞர் ஒருவர், சுவீடனை சேர்ந்த பெண்ணை காதலித்து பெற்றோர்கள் சம்மதத்துடன் மூன்று முறைகளில் திருமணம் செய்துள்ளார்.

திருச்செங்கோட்டை சேர்ந்த இளைஞர் தரணி தன்னுடைய பொறியியல் பட்டப்படிப்பை முடித்து சுவீடனுக்கு சென்று பணிபுரிந்து வருகிறார். சில மாதங்களுக்கு பின் தரணிக்கும் சுவீடன் நாட்டின் மரினா சூசேனுக்கு இடையில் காதல் மலர்ந்துள்ளது.
காதலுக்கு நாடோ, மொழியோ, மதமோ ஒரு தடையே இல்லை, அன்பும் பரஸ்பர புரிதலுமே இன்றியமையாதது என்பதை இருவரும் மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளனர். இருவரும் தங்கள் காதலை தங்கள் குடும்பத்தாருக்கு தெரிவித்து அவர்களின் சம்மத்திற்காக காத்திருந்துள்ளனர்
பிள்ளைகளின் சந்தோசத்தில் தான் தங்களின் சந்தோசம் உள்ளது என்பதை உணர்த்தும் வகையில் இருவீட்டார் சம்மதம் தெரிவித்துள்ளனர். அதை தொடர்ந்து திருச்செங்கோ சாணார் பாளையம் பகுதியைச் சேர்ந்த தம்பதி சண்முகவேல் - தமிழரசி அவர்களின் மகன் தரணிக்கும், சுவீடன் நாட்டின் மரினா சூசேனுக்கும் சாணார்பாளையத்தில் மணமக்களுக்கு திருமணம் நடைபெற்றது.
மணமகன் வீட்டு முறை படி இந்து சடங்குகளும், பெண் வீட்டார் முறைப்படி கிருத்துவ சடங்குகளும், மணமக்களின் ஆசைக்காக சுயமரியாதை இணையேற்புமாக மூன்று வகையான திருமணங்களை செய்துகொண்டனர். இவர்களின் கல்யாண வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்படுகிறது.
