'ரிதிக் பார்க்க கியூட்டா இருக்கான் இல்ல...!' 'மெல்ல கூண்டிற்குள் கையை நுழைத்து...' முரட்டு சம்பவம் செய்த புலி...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்வண்டலூர் உயிரியல் பூங்காவில் மேலும் ஒரு பெண் ஊழியரை ஒன்றரை வயது புலிகடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அடுத்த வண்டலூர் உயிரியல் பூங்காவில் தமிழக முதல்வரால் ரிதிக் என பெயர் சூட்டப்பட்ட ஒன்றரை வயது புலி அடைக்கப்பட்டு இருந்த கூண்டின் அருகே பார்வையாளர்கள் வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருந்தபோது, விலங்குகளை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டு வரும் பரமரிப்பாளர் விஜயா, புலி அடைக்கப்பட்டிருக்கும் கூண்டிற்குள் கையை நுழைத்து தனது வலது கையினால் இதமாக தடவினார்.. அந்த புலி அவரின் கையை கொடூரமாக கடித்து குதறியது.
இதனையடுத்து வனத்துறை அதிகாரிகள் பரிமளாவை மீட்டு வண்டலூர் ரத்தின மங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மேல் சிக்கிசைகாக மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.
