'காவி' நிறத்திற்கு மாறிய 'தலைப்பாகை' ... வெகுண்டெழுந்த 'நெட்டிசன்கள்'...வெடித்திருக்கும் சர்ச்சை !

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Jun 04, 2019 12:22 PM

பன்னிரெண்டாம் வகுப்பிற்கு வழங்கப்பட்ட,பொதுத் தமிழ் புத்தகத்தின் அட்டைப் பக்கத்தில், பாரதியாரின் தலைப்பாகை காவி நிறத்தில் இருப்பது பலரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.இந்த விவகாரம் தற்போது கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

TN Textbook Bharathiar gets saffron Hue

மகாகவி பாரதியார் என்றால் நம் அனைவருக்கும் நியாபகம் வருவது அவரின் கம்பீரமான தோற்றமும், வெள்ளை நிறை தலைப்பாகையும் தான்.பாடப்புத்தகம் முதல் பல இடங்களிலும் மகாகவியை அவ்வாறே பார்த்த நிலையில்,பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தமிழ் புத்தகத்தின் அட்டைப் பக்கதத்தில்,பாரதியாரின் தலைப்பாகை காவி நிறத்தில் இருப்பது,பலத்த சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இதற்கு நெட்டிசன்கள் முதல் பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். வெள்ளை நிற தலைப்பாகை ஏன் காவி நிறத்திற்கு மாறியது என பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.இதனிடையே ‘பாரதியாரை காவி நிற தலைப்பாகையோடு யாராவது பார்த்திருக்கிறீர்களா ? என திமுக எம்எல்ஏவும், முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்நிலையில் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகத்தின் தலைவரான வளர்மதி இதுகுறித்து கூறும்போது,''கல்வி என்பது சாதி,மதம் மற்றும் அரசியலுக்கு முற்றிலும் அப்பாற்பட்டதாகவும்.எனவே இது தெரியாமல் நடந்த தவறாக இருக்கலாம்.அப்படி இருந்தால் அது ஆராயப்பட்டு சரி செய்யப்படும்'' என தெரிவித்தார்.

Tags : #SAFFRON HUE #BHARATHIAR #TN TEXT BOOK