‘அரசுப்பள்ளி முன்னாள் மாணவர்கள், தனியார் நிறுவனத்திற்கு அமைச்சர் விடுக்கும் வேண்டுகோள் என்னனு தெரியுமா’?

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Arunachalam | May 29, 2019 05:41 PM

அரசுப்பள்ளிகளின் மேம்பாட்டுக்கு மாணவர்கள் உதவி செய்யுமாறு அமைச்சர் செங்கோட்டையன் கோரிக்கை விடுத்துள்ளார்.

TN Edu Minister says Ex Student,welfare org to help to improve schools

இதுகுறித்து செங்கோட்டையன் கூறியதாவது, அரசு பள்ளிகளில் பயின்று உயர் பதவியில் இருப்பவர்களும், தொழிலதிபர்களாக இருக்கும் முன்னாள் மாணவர்களும், சமூக அக்கறை கொண்ட நிறுவனங்களும், CSR எனப்படும் தங்களது சமூக பொறுப்புணர்வு நிதி மூலம் அரசு பள்ளிகளை தத்தெடுக்கலாம் என கூறியுள்ளார்.

இதன்மூலம், பள்ளிகளின் உட்கட்டமைப்பு, சுற்றுச்சுவர், பெயிண்டிங், இணையதள வசதிகள், சுகாதாரமான கழிவறைகள், ஆய்வகங்கள், நூலங்கள் போன்ற அடிப்படை வசதிகளை மேம்படுத்திட முன்வருமாறு, அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அழைப்பு விடுத்துள்ளார்.

மேலும், CSR எனப்படும், சமூக பொறுப்புணர்வு நிதி மூலம், கடந்த 2018-2019 ஆம் கல்வியாண்டில், 519 அரசு பள்ளிகளில், 58 கோடி ரூபாய் மதிப்பில், பள்ளிகளின் உள்கட்டமைப்பு பணிகள் நிறைவேற்றப்பட்டதற்கு நன்றித் தெரிவித்துக் கொள்வதாகவும், அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறியுள்ளார்.

இதேபோல், இந்தாண்டும் சமூக அக்கறை கொண்ட தொண்டு நிறுவனங்கள், முன்னாள் மாணவர்கள் அரசுப்பள்ளிகளின் வளர்ச்சிக்கு உதவ அமைச்சர் கோரிக்கை வைத்துள்ளார்.

Tags : #EDUCATION MINISTER #SHENGOTTAIYAN #STATEMENT