'தமிழகத்தின் இன்றைய கொரோனா அப்டேட்...' எந்த மாவட்டங்கள் முதல் மற்றும் 2-வது இடம்...? - மேலும் முழு விவரங்கள்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் இன்று (08-09-2020) ஒரே நாளில் 5,684 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்படைந்த 5,684 பேரில் 5,682 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்றும், 2 பேர் வெளிநாடு மற்றும் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் என்று சுகாதாரத்துறை குறிப்பிட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் மொத்தம் கொரோனா பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 4,74,940 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 50,213 ஆக உள்ளது.
சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 988 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,43,602 ஆக அதிகரித்துள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக அதிகப்பட்சமாக கோயம்பத்தூரில் 446 பேருக்கும், கடலூரில் 407 பேருக்கும், செங்கல்பட்டில் 364 பேருக்கும் கொரோனா உறுதியாகி உள்ளது.
மேலும் தமிழகத்தில் இன்றைய தினம் 6,599 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,16,715 ஆக உயர்ந்துள்ளது.
உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையைப் பொருத்தவரை இன்றைய தினம் அரசு மருத்துவமனையில் 44 பேர், தனியார் மருத்துவமனையில் 43 பேர் என மொத்தம் 87 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், மொத்தமாக தற்போது வரை கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 8,012 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை தமிழகத்தில் மொத்தம் 52,85,822 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், இன்று மட்டும் சுமார் 81,066 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.