'தமிழகத்தின் இன்றைய (25-12-2020) கொரோனா அப்டேட்...' சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்’... முழு விவரங்கள் உள்ளே...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் இன்று மேலும் 1,027 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று குறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழகத்தில் இன்று புதிதாக 1,027 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8,12,142 ஆக உயர்ந்துள்ளது.
இன்று 1,103 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதால், இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 7,90,965 ஆக அதிகரித்துள்ளது. இன்றைய நிலவரப்படி 9,129 பேர் (சிகிச்சை மற்றும் தனிமை) கொரோனா தொற்றுடன் உள்ளனர். இன்று தனியார் மருத்துவமனையில் 8 பேர், அரசு மருத்துவமனையில் 4 பேர் என 12 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 12,048 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.
அதிகபட்சமாக சென்னையில் மட்டும் இன்று 292 பேர் கொரோனா தொற்று மூலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் 332 பேர் குணமடைந்துள்ளனர். வெளி மாநிலத்தில் இருந்து வந்த 3 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்
