‘பெங்களூரு’ செல்வதாக கூறிவிட்டு... திருப்பூரிலிருந்து கிளம்பிய ‘தொழிலதிபர்’... கோவை ‘ஸ்டார்’ ஹோட்டலில் நடந்த ‘அதிர்ச்சி’ சம்பவம்...

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Mar 25, 2020 08:24 PM

திருப்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் கோவையில் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tirupur Businessman Commits Suicide In Coimbatore Star Hotel

திருப்பூர் மாவட்டம் வேலம்பாளையத்தைச் சேர்ந்த சூரியபிரகாஷ் என்பவர் பின்னலாடை நிறுவனம் ஒன்றை நடத்தி வந்துள்ளார். இவருக்கும் பிரபல பின்னலாடை நிறுவனம் ஒன்றின் உரிமையாளருடைய மகளுக்கும் 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு கைக்குழந்தை ஒன்றும் உள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக திருப்பூரிலுள்ள பின்னலாடை நிறுவனங்கள் கடந்த வாரம் முதலே மூடப்பட்டுள்ளன.

இதையடுத்து பெங்களூரு செல்வதாகக் கூறிவிட்டு கிளம்பிய சூரியபிரகாஷ் நேற்று கோவை சென்று அங்குள்ள ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் தங்கியுள்ளார். அதன்பிறகு மாலை 6 மணியளவில் 6வது மாடியில் அவர் தங்கியிருந்த அறையின் ஜன்னலில் இருந்து திடீரென குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த ஹோட்டல் ஊழியர்கள் போலீசாருக்குத் தகவல் கொடுக்க, சம்பவ இடத்துக்கு விரைந்த சென்ற போலீசார் அவருடைய உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். சமீப காலமாக தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக சூரியபிரகாஷ் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்து வந்ததாகவும், அதன்காரணமாக தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் எனவும் கூறப்படும் நிலையில், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. தற்கொலை எண்ணம் தோன்றுபவர்கள், மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 போன்றவற்றை தொடர்பு கொண்டால் இலவசமாக ஆலோசனைகள் பெறலாம்.

Tags : #CRIME #COIMBATORE #TIRUPUR #BUSINESSMAN #STARHOTEL #SUICIDE #LOSS