பெற்ற மகளை 'கர்ப்பிணி' என்றும் பாராமல்... பவுடரில் 'என்ன' கலந்தார் தெரியுமா...? காதல் திருமணம் செய்ததால் ஆத்திரம்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Issac | Feb 05, 2020 12:41 PM

திருவள்ளூர் அருகே காதலித்து திருமணம் செய்த மகள் முகத்தில் பவுடரில் அமிலம் கலந்து வீசிய தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

Thiruvallur: Father arrested for throwing acid on daughter

திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் சாய்குமார். அவர்  வீட்டருகே வசித்து வந்த தீபிகா என்ற பெண்ணை கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இதனையறிந்த தீபிகாவின் தந்தையும் விருப்ப ஓய்வு பெற்ற தலைமைக் காவலருமான பாலகுமார் வீட்டை காலி செய்துவிட்டு திருத்தணியில் குடியேறினார். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான தீபிகா சாய்குமாருக்கு கடந்த ஜூன் மாதம் போன் செய்து வரவழைத்து பெங்களூர் சென்று ரகசியமாக திருமணம் செய்துள்ளனர்.

தற்போது தீபிகா ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்தார். இந்த நிலையில் அவரது தந்தை பாலகுமார் கடந்த 31ஆம் தேதி வீட்டிற்கு வந்து, அம்மாவின் உடல் நிலை சரியில்லாததால் தனது வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார். இதற்கு தீபிகா மறுக்கவே, கையில் வைத்திருந்த பவுடர் கலந்த அமிலத்தை தீபிகாவின் முகத்திலும், மாமியார் பாக்கியலட்சுமி மற்றும் பெரிய மருமகள் திவ்யா முகத்திலும் வீசிவிட்டு தீபிகாவை காரில் கடத்திச்சென்றனர்.

கர்ப்பிணிப் பெண் என்றும் பார்க்காமல் அடித்து உதைத்து துன்புறுத்தியதாகவும், உன்னை கொலை செய்துவிடுவேன் என்றும் தந்தை பாலகுமார் மிரட்டியதாக சாய்குமாரின் தந்தை பாலாஜி செவ்வாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதையறிந்த தீபிகாவின் தந்தை பாலகுமார் வேப்பம்பட்டு மெயின் ரோட்டில் இறக்கிவிட்டு அங்கிருந்து தப்பினார்.

இந்நிலையில் நேற்று திருவள்ளூர் டிஎஸ்பி கங்காதரன் தலைமையிலான காவல் துறையினர் வேப்பம்பட்டு பகுதியில் சோதனை செய்திருந்த போது அவ்வழியாக வந்த பாலகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags : #POWDER