'கட்டாயம்' இத செய்யணும்... 'சென்னை' முழுவதும் உள்ள 'டீக்கடைகளுக்கு'... அதிரடி உத்தரவு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனாவைக் கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக சென்னை முழுவதும் பெரிய வணிக வளாகங்கள் மூடப்பட்ட நிலையில் மிகவும் பிரசித்தி பெற்ற தி.நகர் ரங்கநாதன் தெருவும் தற்போது மூடப்பட்டு இருக்கிறது. பொதுமக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்கும் பொருட்டு மேற்கண்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

இந்த நிலையில் சென்னையில் உள்ள டீக்கடைகளுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்து உணவு கட்டுப்பாடு துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக உணவு பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், '' டீ டம்ளர்களை சோப் ஆயில் போட்டு கழுவ வேண்டும். மாஸ்டருக்கு காய்ச்சல் இருந்தால் அவரை உடனே மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்,'' என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இதுதவிர பெரிய உணவகங்கள், நட்சத்திர உணவகங்கள் பாத்திரங்களை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்றும் அதில் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.
