'இந்தியாவின் பணக்கார பெண்'.... 'ஹெச்.சி.எல் நிறுவனத்தின் புதிய தலைவர்'... எதிர்கொள்ளப் போகும் புதிய சவால்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Jul 17, 2020 04:11 PM

இந்தியாவின் நான்காவது மிகப் பெரிய ஐ.டி நிறுவனமாக விளங்கும் ஹெச்.சி.எல் நிறுவனத்தின் புதிய தலைவராக ரோஷினி நாடார் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.

Roshni Nadar, India\'s wealthiest woman,is now the chairperson of HCL

தமிழகத்தைச் சேர்ந்த சிவநாடாருக்கு சொந்தமான ஹிந்துஸ்தான் டெக்னாலஜிஸ் நிறுவனம், உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் 1,50,287 ஊழியர்கள் பணி புரிகிறார்கள். ஒரு லட்சம் கோடி சொத்து மதிப்பு கொண்ட ஹெச்.சி.எல் நிறுவனத்தின் தலைவராக சிவநாடார் இருந்து வந்தார். இந்த நிலையில் சிவநாடாரின் மகள் ரோஷினி நாடார் மல்கோத்ரா இன்று ஹெச்.சி.எல்லின் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

IIFL Wealth Hurun India வெளியிட்டுள்ள புள்ளி விவரப்படி இந்தியாவிலேயே பணக்கார பெண் ரோஷினி நாடார் ஆவார் இவரின் சொத்து மதிப்பு ரூ 31400 கோடி ஆகும். கடந்த 2017, 2018, 2019 ஆண்டுகளில்  தொடர்ச்சியாக போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட 100 செல்வாக்குமிக்க பெண்கள் பட்டியலில் ரோஷினி இடம் பெற்றிருந்தார். டெல்லியில் பிறந்த ரோஷினி, அமெரிக்காவின் எம்.பி .ஏ பட்டம் பெற்றவர்.

38 வயதாகும் ரோஷினி, தற்போது வரை ஹெச்.சி.எல் கார்ப்பரேசன் நிறுவனத்தின் எக்ஸிகியூடிவ் இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் ஹெச். சி.எல் டெக்னாலஜி நிறுவனத்தின் துணைத் தலைவராகவும் இருந்து வந்தார். அவர் சென்னையில் உள்ள பிரபல சிவ சுப்ரமணிய நாடார் பொறியியல் கல்லூரியை நடத்தி வரும் சிவநாடார் அறக்கட்டளையில் உறுப்பினராகவும் ரோஷினி நாடார் உள்ளார்.

ஷிக்தர் மல்கோத்ரா என்பவரைத் திருமணம் செய்துகொண்ட ரோஷினி தம்பதிக்கு இரு குழந்தைகள் உள்ளனர். தற்போது பொறுப்பேற்றுள்ள ரோஷினிக்கு, கொரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கல்களை எதிர்கொள்வது என்பது பெரும் சவாலாகப் பார்க்கப்படுகிறது.

மற்ற செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Roshni Nadar, India's wealthiest woman,is now the chairperson of HCL | Tamil Nadu News.