'நீ பேட்டிங் பண்ணு கண்ணா, நான் பவுலிங் போடுறேன்' ... எப்படி இருந்த ஏரியா இப்போ எப்படி ஆயிருச்சு ... 'ரங்கநாதன் தெரு'வின் தற்போதைய நிலை!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை தி.நகரிலுள்ள ரெங்கநாதன் தெரு வெறிச்சோடிக் காணப்பட்ட நிலையில் அங்குள்ள கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள் கிரிக்கெட் விளையாடி வருகின்றனர்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கமுள்ள நிலையில் பல மாநிலங்கள் பள்ளி, கல்லூரிகள், வணிக வளாகங்கள் போன்றவற்றை மூட வேண்டி உத்தரவிட்டிருந்தது. அதே போல தமிழகத்திலும் பள்ளி, கல்லூரிகள், வணிக வளாகங்கள், திரையரங்குகள் ஆகியவற்றை மார்ச் 31 ம் தேதி வரை மூட வேண்டி தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. மேலும் அதிகமாக மக்கள் எங்கும் கூட வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் சென்னையில் அதிக ஆட்கள் நடமாடும் தி. நகர் பகுதியில் அனைத்து கடைகளையும் அடைக்க உத்தரவிட்டிருந்தது.
இதனால் எப்போதும் மக்கள் கூட்டம் அலைமோதும் தி.நகரிலுள்ள ரெங்கநாதன் தெரு வெறிச்சோடிக் காணப்பட்டது. 15 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் ரெங்கநாதன் தெருவிலுள்ள கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள் அங்கு கிரிக்கெட் விளையாடி வருகின்றனர். ஆட்கள் நடமாட்டம் இல்லாத நிலையில், ரெங்கநாதன் தெருக்களில் கிருமி நாசினியை தெளிக்கும் பனி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.