'காசு கொடுத்து வாங்குன உரம்...' 'பயிர்களுக்கு போட போட திடீர்னு எல்லாம் கருகுது...' - விஷயத்த கேள்விப்பட்டு மக்கள் கடும் அதிர்ச்சி...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பெரம்பலூர் மாவட்டத்தில் கிராம மக்களுக்கு, அதே ஊரைச் சேர்ந்த மூவர் சுண்ணாம்பு கல்லை உரம் எனக்கூறி ரூ.1.26 கோடி மோசடி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம் சிறுகுடல் கிராமத்தில் வாழ்ந்து வரும் மக்கள் பெரும்பாலும் விவாயத்தையே நம்பி வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் அதே கிராமத்தை சேர்ந்த ராமலிங்கம், கார்த்திக், துரைக்கண்ணு ஆகியோர் 300-க்கும் மேற்பட்ட விவசாயிகளிடம், விவசாயத்திற்கு தகுந்த உரம் பாக்டாம்பாஸ் உரம் தான் எனச்சொல்லி சுண்ணாம்புக் கற்களை விற்று 12 லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளனர்.
விவசாயிகள் பலர் 1300 சுண்ணாம்பு மூட்டைகளை 12 லட்சத்து 61 ஆயிரம் ரூபாய்க்கு விற்றுள்ளனர். இதை விளைநிலத்தில் பயிரிட்ட மக்காசோளத்திற்கு தெளித்த நிலையில், மக்காச்சோள பயிர்கள் திடீரென கருகியதாக கூறப்படுகிறது.
அக்கிராம மக்கள் அனைவரும் கூடி இந்த சம்பவம் தொடர்பாக விசாரித்ததில், உரம் என சுண்ணாம்புக் கல்லை வழங்கிய மோசடியை ஒப்புக்கொண்ட உர விற்பனையாளர்கள் தற்போது பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.