எவ்வளவோ 'முயற்சி' பண்ணியும் முடியல.. விளையாடிக் கொண்டிருக்கும்போது நடந்த விபரீதம்... அதிர்ச்சி சம்பவம்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Issac | Jan 13, 2020 02:09 PM
காட்டுமன்னார்குடி அருகே ஆற்றில் தவறி விழுந்து இரண்டு சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் சிறுகாட்டூர் புத்தூர் கிராமத்தின் அருகே வடவாறு உள்ளது. இந்த ஆற்றின் அருகே அதே பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுமிகளான விஜயலட்சுமி, சினேகா, தீபிகா ஆகியோர் விளையாடிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது திடீரென மூன்று பேரும் ஆற்றில் தவறி விழுந்துள்ளனர்.
குழந்தைகளின் கூக்குரலை கேட்ட அக்கம்பக்கத்தினர், நீரில் தத்தளித்த விஜயலட்சுமியை பத்திரமாக மீட்டனர். இருப்பினும் சினேகா, தீபிகா ஆகியோர் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். சினேகாவின் உடல் மீட்கப்பட்டு விட்ட நிலையில், தீபிகாவின் உடலை மீட்க போராடினர். ஆனால் நீண்ட முயற்சிக்கு பின், தீபிகாவும் சடலமாக மீட்கப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Tags : ##RIVER ##CHILDRENS
