'கல்யாணத்துக்கு முன்னாடியே இருந்த காதல்'... '8 வருஷமா மனசுக்குள்ளேயே போட்டு'... கணவருக்கு பெரிய ஷாக் கொடுத்த மனைவி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருமணத்திற்கு முன்பு இருந்த காதலை மனதில் வைத்துக்கொண்டு 8 வருடத்திற்குப் பிறகு மனைவி எடுத்த முடிவு கணவரை அதிர்ச்சியில் தள்ளியுள்ளது.

திருச்சி புத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் மகாலிங்கம். இவர் கோயம்புத்தூரில் அரசு பஸ் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ரம்யா என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இருவரது திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாகச் சென்று கொண்டிருந்ததன் பயனாக இரண்டு ஆண் குழந்தைகளும் பிறந்தது. மகாலிங்கம் தன்னுடைய வேலை காரணமாக கோயம்புத்தூரிலேயே தங்கி இருந்துள்ளார். ரம்யாவும், குழந்தைகளும் திருச்சியில் வசித்தனர்.
இந்நிலையில் திருச்சியிலிருந்த உறவினர்களிடம் இருந்து கோவையிலிருந்த மகாலிங்கத்திற்கு செல்போன் அழைப்பு வந்தது. அதில் பேசிய உறவினர்கள் ரம்யா குழந்தைகளுடன் மயமாகி விட்டதாகக் கூறியுள்ளார்கள். இதைக் கேட்டு அதிர்ந்துபோன மகாலிங்கம் கோயம்புத்தூரிலிருந்து திருச்சிக்கு விரைந்துள்ளார். வீட்டிற்கு வந்த அவர் என்ன நடந்தது என்பது குறித்து அக்கம் பக்கத்தில் விசாரித்துள்ளார். ஆனாலும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. பின்னர் இதுகுறித்து உறையூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்த விசாரணை நடத்தினர்.
விசாரணையில் ரம்யாவுக்கு திருமணம் ஆவதற்கு முன்னதாகவே வேறு ஒரு ஆணை காதலித்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து ரம்யா தன் குழந்தைகளுடன் தன்னுடைய முன்னால் காதலனுடன் சென்றதும் போலீசாருக்கு தெரியவந்தது. இதைக் கேட்டு ஆடிப்போன மகாலிங்கம், கதறித் துடித்துள்ளார். இதற்கிடையே அவர்கள் எங்குச் சென்றார்கள், எங்குத் தங்கி இருக்கிறார்கள் என்று போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
8 வருடத் திருமண வாழ்க்கைக்குப் பின்னரும், திருமணத்திற்கு முன்பு காதலித்த காதலனோடு பெண் சென்றுள்ள சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
