'துப்பாக்கிக் குண்டுகள் முழங்க...' - முழு அரசு மரியாதையுடன் 'எழுத்தாளர்' கி.ரா இறுதிச் சடங்கு நடந்தது...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்21 துப்பாக்கிக் குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் மறைந்த எழுத்தாளர் கி.ரா.வுக்கு இறுதிச் சடங்கு நடைபெற்றது.
எழுத்தாளர் கி.ராஜநாராயணன் உடல், அவர் சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள இடைசெவல் கிராமத்தில் அரசு மரியாதையுடன் இன்று (19-05-2021) தகனம் செய்யப்பட இருக்கிறது.
சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் கி.ராஜநாராயணன் புதுச்சேரி லாசுப்பேட்டை அரசுக் குடியிருப்பில் அவரது இல்லத்தில் கடந்த திங்கள்கிழமை அங்க்ற்று நள்ளிரவில் காலமானார்.
கி.ரா. உடலுக்கு செவ்வாய்க்கிழமை பிற்பகல் ஒரு மணியளவில் புதுவை அரசு சார்பில் காவல் துறையினரின் மரியாதை அளிக்கப்பட்டது. இதன்பின்னர் அவரது உடல், அவர் சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள இடைசெவல் கிராமத்திற்கு நேற்று இரவு கொண்டுவரப்பட்டது. இந்த நிலையில் நேற்று அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெறும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
அங்கு அரசியல் தலைவர்கள், எழுத்தாளர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிலையில் இன்று பிற்பகல் 12.30 மணியளவில் துப்பாக்கி குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் கி.ரா. உடலுக்கு இறுதிச்சடங்கு நடைபெற்றது. கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்களில் எழுத்தாளர்களுக்கு அரசு மரியாதை வழங்கப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் ஒரு எழுத்தாளருக்கு அரசு மரியாதை வழங்கப்படுவது இதுவே முதல் முறை ஆகும். எனவே பிற தமிழ் எழுத்தாளர்கள் தமிழக முதல்வருக்கு நன்றியை தெரிவித்து வருகின்றனர்.