ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் : "முதலமைச்சர் முக.ஸ்டாலினின் ஆட்சிக்கு கிடைத்த வெற்றி" - EVKS இளங்கோவன்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதியில் நடைபெற்ற இடைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. இதில் EVKS இளங்கோவன் வெற்றிபெற்று உள்ளார்.
Images are subject to © copyright to their respective owners.
Also Read | மகுடம் சூடும் மன்னர் சார்லஸ்.. தயாராகும் 700 ஆண்டு பழமையான அரியணை.. மிரள வைக்கும் பின்னணி..!
இடைத்தேர்தல்
ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத் தேர்தல் கடந்த 27 ஆம் தேதி நடைபெற்றது. இந்நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வந்தது. திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி சார்பில் ஈவிகேஸ் இளங்கோவன் தேர்தலில் போட்டியிட்டார். அவருக்கு ஆதரவாக அமைச்சர்கள் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த இடை தேர்தலில் அதிமுக சார்பில் கேஎஸ் தென்னரசுவும் தேமுதிக சார்பில் ஆனந்த் மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன் போட்டியிட்டனர்.
Images are subject to © copyright to their respective owners.
வாக்கு எண்ணிக்கை
இந்நிலையில், இன்று ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் ஆரம்பம் முதலே ஈவிகேஸ் இளங்கோவன் தொடர்ந்து முன்னிலையில் இருந்தார். 15 ஆம் சுற்று முடிவில் அவர் 1,10,556 வாக்குகளை பெற்றிருந்தார். அதிமுக 43981 வாக்குகளையும், நாம் தமிழர் கட்சி 10804 வாக்குகளையும் தேமுதிக 1177 வாக்குகளையும் பெற்றுள்ளனர். இதில் ஈவிகேஎஸ் இளங்கோவன் வென்றதாக அறிவிக்கப்பட்டார். வாக்கு வித்தியாசம் 66,575 ஆகும்.
Images are subject to © copyright to their respective owners.
மீண்டும் எம்எல்ஏ
ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் வெற்றிபெற்றதன் மூலம், 39 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழக சட்ட மன்றத்திற்குள் நுழைய இருக்கிறார் ஈவிகேஎஸ் இளங்கோவன். முன்னதாக கடந்த 1984 ஆம் ஆண்டு சத்தியமங்கலம் தொகுதியில் போட்டியிட்டு சட்ட மன்ற உறுப்பினராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Images are subject to © copyright to their respective owners.
முதல்வரின் வெற்றி
இந்நிலையில் வெற்றி குறித்து பேசிய ஈவிகேஎஸ் இளங்கோவன்,"தேர்தலில் வெற்றி கிடைக்கும் என்பது தெரியும். ஆனாலும் இவ்வளவு பெரிய வெற்றியை எதிர்பார்க்கவில்லை. மிகப்பெரிய அளவிலே ஈரோட்டு மக்கள் வெற்றியை தந்திருக்கிறார்கள். இது எனக்கு கிடைத்த வெற்றி என்பதை விட, முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சிக்கு கிடைத்த வெற்றியாகவே இதனை கருதுகிறேன். அதேபோல, எங்களுடைய தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பாதயாத்திரை சென்றிருக்கிறார். அதற்கும் அங்கீகாரம் தரும் வகையில் தான் இந்த வெற்றி அமைந்துள்ளது. வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி புதுச்சேரி உட்பட 40 இடங்களிலும் வெற்றி பெரும் என்பதற்கான முன்னோட்டம் தான் இந்த வெற்றி" எனத் தெரிவித்தார்.
Also Read| 800 ஆண்டு பழமையான மம்மியை தனது தோழி என கூறிய நபர்.. பெரு நாட்டில் விநோதம்..!