VIDEO : கெமிக்கல்ஸ்' எதுவும் இல்ல... 'இயற்கை’ முறையில ’கொரோனா’ வைரஸ தடுக்குற... 'கருவி' ஒண்ண கண்டுபுடிச்சு அசத்திருக்காங்க! - யார் இவங்க?
முகப்பு > செய்திகள் > தமிழகம்உலகம் முழுவதும் கடும் தொற்றினை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸில் இருந்து நம்மை காத்துக் கொள்ள உலகம் முழுவதிலும் பல்வேறு கண்டுபிடிப்புகள் நிகழ்ந்து வருகின்றன.

சில வாரங்களுக்கு முன், திருப்பூர் மாவட்டத்தில் கிருமி நாசினி சுரங்கம் ஒன்றினை அம்மாவட்ட கலெக்டர் விஜய கார்த்திகேயன் ஆலோசனையில் உருவாக்கப்பட்டிருந்தது. அதனுள், நுழைந்து வெளியேறும் நபர் மீது முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்படும். இது தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அமல்படுத்தப்பட்டு வந்த நிலையில், உலக சுகாதார அமைப்பு, ஒருவரின் உடம்பின் கெமிக்கல்ஸ் கலந்த கிருமி நாசினி தெளிக்கப்படுவது என்பது அவரது தோல் மற்றும் உடலுக்கு பின் விளைவுகளை ஏற்படுத்தும் என கூறி, கிருமி நாசினியை உடம்பில் தெளிக்க தடை விதித்தது.
கெமிக்கல் என்பதால், கிருமி நாசினி தடை செய்யப்பட்ட நிலையில், இப்போது கெமிக்கலுக்கு பதிலாக நீராவியுடன் சில மூலிகைகளை இணைத்து கிருமி நாசினி ஒன்றினை தெளிக்கும் கருவி ஒன்றை IFCPL என்ற நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. முன்னதாக, கிருமி நாசினி தெளிக்கப்பட்ட சுரங்கம் என்பது திரவம் (liquid) போன்று இருந்த நிலையில் IFCPL நிறுவனத்தின் கண்டுபிடிப்பு என்பது முழுக்க முழுக்க நீராவியாக (steam) உள்ளது. இதனுடன், மூலிகை பொருட்களான வேப்பிலை, மஞ்சள், யூகலிப்டஸ் ஆகியவையும் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்த சுரங்கத்தினுள் மக்கள் நுழையும் போது திரவம் போன்ற உணர்வை தராமல், உடம்பில் தோன்றும் கிருமிகளை ஒழித்து ஒருவிதமான புத்துணர்ச்சியையும், நம்பிக்கையும் அளிக்கும். அதே போல, இதனுள் நுழைந்து ஒருவர் வெளியேறுவதன் மூலம் அவர்களுக்கு எந்தவித பின்விளைவுகள் ஏற்படாத வகையில் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கெமிக்கல் கிருமி நாசினிக்கு மாற்றாக இயற்கை மூலிகைகள் அடங்கிய நீராவி சுரங்கம் குறித்து மேலும் விளக்கத்தை IFCPL நிறுவனத்தின் MD ஜெகன்நாதன் அளித்துள்ளார். வீடியோவை காண கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்க:

மற்ற செய்திகள்
