'பெத்த குழந்தைங்கன்னு கூட பார்க்காம..' வேலைக்கு போயிருந்த அம்மா வீட்டுக்கு வந்து பார்த்தபோது... சைக்கோ தந்தை செய்த கொடூரம்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Issac | Feb 02, 2020 04:11 PM

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அருகே, பெற்ற குழந்தைகள் என்றும் பார்க்காமல்  5 மற்றும் 7 வயது சிறுமிகளிடம் பாலியல் சீண்டலில்  ஈடுபட்ட சைக்கோ தந்தையை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

Daughters sexually tease: Psycho dad arrested in pokco

ஏர்வாடியை அடுத்த கன்னிராஜபுரத்தை சேர்ந்த நபர் மாரிமுத்து. 10 ஆண்டுகளுக்கு முன் காதல் கலப்பு திருமணம் செய்த மாரிமுத்துவிற்கு 5 மற்றும் 7 வயதில் இரு மகள்கள் உள்ளனர்.

இந்நிலையில் மனைவி வேலைக்கு சென்றிருந்த சமயத்தில், வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த இரு சிறுமிகளிடமும், பெற்ற பிள்ளைகள் என்றும் பார்க்காமல் மாரிமுத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதுபற்றி வேலை முடிந்து வீடு திரும்பிய தாயிடம், இரு சிறுமிகளும் கூறி அழுதுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த தாய், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழும அதிகாரிகளிடம் முறையிட்டதன் பேரில், அவர்கள் கீழக்கரை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து மாரிமுத்துவை போக்ஸோ சட்டத்தில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags : #PHSYCOFATHER