'குழந்தைகளின் ஆபாச வீடியோ வெப்சைட்களை முடக்காமல், பாக்குறவங்களை கைது செய்வது இதனாலதான்!'.. மிரளவைக்கும் பின்னணி.. பகிரும் வழக்கறிஞர்! வீடியோ!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Siva Sankar | Dec 13, 2019 09:40 PM
குழந்தைகள் ஆபாச வீடியோக்களுக்கான குற்றங்களைப் பற்றியும், அவற்றுக்கான சட்டங்களை பற்றியும் வழக்கறிஞர் கார்த்திகேயன் நம்மிடையே பகிர்ந்துள்ளார். போர்னோகிராபி என்று சொல்லப்படும் 18+ வீடியோக்களை தனிப்பட்ட முறையில் பார்ப்பதற்கு தடைகள் இல்லை, ஆனால் பொதுவெளியில் பகிர்வது குற்றமாகும். அதே சமயம், குழந்தைகள் ஆபாசப்படம் என்று சொல்லப்படும் சைல்டு போர்னோகிராபியை பார்ப்பதே குற்றம் என்பதும், அவர்களின் பட்டியலை வைத்துதான் போலீஸார் விசாரித்து வருவதாக கார்த்திகேயன் கூறுகிறார்.
மும்பையைச் சேர்ந்த 50 வயது மதிக்கத்தக்க இந்திய விமானி ஒருவர் அமெரிக்கா செல்லும்போது, அவர் தங்கியிருந்த அறையில் குழந்தைகள் ஆபாசப்படத்தை பார்த்ததை அமெரிக்க சைபர் க்ரைம் கண்டுபிடித்து அவரை பற்றிய ரிப்போர்ட்டினை இந்தியாவுக்கு அனுப்பியதோடு, இந்தியாவில் இருக்கும் பல இடங்களில் இருந்தும் இப்படியான வீடியோக்களை இணையதளங்களில் பதிவேற்றியுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அவர்களின் உதவியோடும், இந்திய சைபர் குற்றவியல் பிரிவின் முயற்சியிலும் மென்னெடுக்கப்பட்ட ஆய்வில்தான், இணையதள சர்வீஸ் புரோவைடர்களான சிம் நெட்வொர் அல்லது வைஃபை சர்வீஸ் புரொவடைர்கள் மூலம் மொபைலில் இருந்தும் கணினியில் இருந்தும் குழந்தைகள் ஆபாசப் படம் பார்ப்பவர்கள், பகிர்பவர்கள், பதிவேற்றம் செய்பவர்களின் இணைய முகவரியை வைத்து 5 ஆயிரம் பேர் கொண்ட பெயர்ப்பட்டியல்கள் தயாரானது. அப்படித்தான் திருச்சியைச் சேர்ந்த கிறிஸ்டோபர் குழந்தைகள் ஆபாசப்படங்களை பதிவிறக்கம் செய்வதும், பரப்புவதுமான தொழில்களைச் செய்ததால் பிடிபட்டார்.
இந்தியாவை பொருத்தவரை, ஆண், பெண், வயதானவர்கள் என எல்லா விதமானவர்களும் பார்க்கும் குழந்தைகள் ஆபாச வீடியோக்களை பதிவிடக் கூடிய டார்க் வெப்சைட் ஒன்றை சமீபத்தில் போலீஸார் கண்டுபிடித்தனர். அதன்படி இப்படியான வீடியோக்களை பணம் செலுத்தி பார்ப்பதற்கான பார்வையாளர்கள் இருக்கின்றனர். இந்த சைட்களை முடக்கிவிட்டால், வேறு ஒரு சைட் தொடங்கி அவற்றை அப்லோடு செய்துவிடுவார்கள். எனவே இந்த சைட்கள் இருப்பதற்கான முக்கியக் காரணம் பார்வையாளர்கள் என்பதால், அவர்கள் மீது சட்டம் பாய்வதாக கார்த்திகேயன் கூறுகிறார்.
சினிமாவில் இருப்பது போலவே, போர்னோகிராபிகளையும் திரைப்படம் போல தயாரிப்பாளர், நடிகர், நடிகையர் மூலம் உருவாக்குகின்றனர். அந்த சைட்கள் முடக்கப்படுவதில்லை. அவற்றிற்கும் குழந்தைகள் ஆபாச வீடியோக்களை உருவாக்க அனுமதியில்லை. ஆனால் பொதுவாழ்க்கையில் இருப்பவர்களின் அந்தரங்க வீடியோக்களை ஹிடன் கேமராக்களை வைத்து பதிவு செய்வதும், அப்லோடு செய்வதும், பகிர்வதும், பார்ப்பதும் குற்றமாகும் என்றும் இந்த சட்டங்கள் எல்லாம் 2008-ஆம் ஆண்டிலேயே வந்துவிட்டதாகவும் கார்த்திகேயன் தெளிவுபடுத்துகிறார்.