"தங்கம் வாங்கிட்டு வான்னு சொன்னாரு, ஆனா இப்போ".. காமன்வெல்த் போட்டியில் தங்கம் ஜெயிச்சதும் கதறித் துடித்த வீராங்கனை
முகப்பு > செய்திகள் > தமிழகம்காமன்வெல்த் பவர் லிப்டிங் விளையாட்டு போட்டிகள் தற்போது நியூசிலாந்தின் ஆக்லாந்து பகுதியில் வைத்து நடைபெற்று வருகிறது.

Also Read | அழைப்பு இல்லாத திருமண வீட்டிற்கு சாப்பிட போன MBA மாணவன்.. கண்டுபிடித்து கொடுத்த அதிர்ச்சி தண்டனை!!
இதில் இந்தியாவிலிருந்து ஏராளமான வீரர்கள் சென்றுள்ள நிலையில், தமிழ்நாட்டில் இருந்தும் காமன்வெல்த் போட்டியில் கலந்து கொள்ள சிலர் சென்றுள்ளனர்.
கடந்த நவம்பர் மாதம் 28ஆம் தேதி தொடங்கிய போட்டிகள் டிசம்பர் நான்காம் தேதி வரை நடைபெறுகிறது. தமிழ்நாடு சார்பில் எம்பிஏ பட்டதாரியான லோகபிரியாவும் கலந்து கொண்டுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே உள்ள கல்லுக்காரன்பட்டி என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வமுத்து. இவரது மகள் தான் லோகப்பிரியா. இவருக்கு இரண்டு சகோதரிகளும் உள்ளனர். தந்தை செல்வமுத்து கடந்த சில ஆண்டுகளாக சொந்த ஊரில் தங்கி இருந்த நிலையில், மகள் சாதனை படைக்க வேண்டும் என்பதால் லோகபிரியாவின் தாயார் பட்டுக்கோட்டையில் உள்ள பொதுக் கழிவறையில் வசூல் செய்யும் வேலை பார்த்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
ஏழை குடும்பத்தில் பிறந்து பயிற்சியாளர் ரவியின் தொடர் பயிற்சியால் பளு தூக்குதலில் பல மெடல்களை வென்ற வீராங்கனை லோகபிரியா, காமன்வெல்த் பவர் லிப்டிங் போட்டியில் கலந்து கொண்டு, 52 கிலோ எடைப்பிரிவில், 350 கிலோ எடையை தூக்கி தங்கப்பதக்கம் வென்று இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
ஆனால் அவர் பதக்கம் வென்ற மகிழ்ச்சி ஐந்து நிமிடங்கள் கூட நீடிக்கவில்லை. இதற்கு காரணம் ஊரிலிருந்து தனது தந்தை செல்வமுத்து மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக லோகபிரியாவுக்கு வந்து சேர்ந்த தகவல் தான். முன்னதாக செல்வமுத்து மாரடைப்பால் இறந்து விட்ட நிலையில், மக்கள் லோகபிரியா போட்டியில் கவனம் சிதறக் கூடும் என்பதால், அவரிடம் சொல்லாமல் இருந்த நிலையில், பதக்கம் வென்ற பின் அவரிடம் தெரிவிக்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றது.
தங்கம் வென்று மகிழ்ச்சியுடன் வந்த லோகபிரியா, தந்தை இறந்த செய்தியை அறிந்து கதறித் துடித்துள்ளார். பதக்கம் வென்று விட்டு தந்தையிடம் மகிழ்ச்சியாக காட்ட வேண்டும் என ஆசையுடன் இருந்த லோகபிரியாவுக்கு இப்படி ஒரு நிலை வந்துள்ளது பலரையும் கண் கலங்க வைத்துள்ளது.
இது தொடர்பாக லோகபிரியா வெளியிட்ட வீடியோவும் பலரையும் மனம் நொறுங்க வைத்துள்ளது. மெடலை தந்தையிடம் காட்ட வேண்டும் என விரும்பியதாகவும், ஆனால் அது நடக்கவில்லை என்றும் கண்ணீருடன் லோகபிரியா தெரிவிக்கிறார். அதே போல, குடும்பத்தின் வறுமை நிலையையும் கண்ணீர் மல்க விளக்குகிறார் லோகபிரியா.
Also Read | நெஹ்ரா பின்னாடி ஒளிஞ்சு நின்ன இந்திய வீரர்.. அடுத்த நிமிஷமே நடந்த சம்பவம்.. "சேட்ட புடிச்ச ஆளா இருப்பாரோ?

மற்ற செய்திகள்
