'அதிகாலையில் சுற்றி திரியும் அரைநிர்வாண உருவங்கள்...' 'கையில ஆயுதங்கள்...' யார் இந்த மர்ம நபர்கள்...? - சிசிடிவி பார்த்தப்போ கடும் அதிர்ச்சி...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கோவையில் அதிகாலை நேரத்தில் அரை நிர்வாணத்தில் உலவி வரும் மர்ம நபர்களின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளிவந்து வைரலாகி வருகிறது.

கோயம்பத்தூர் இருகூர் தீபம் நகர் பகுதியில் கடந்த 23-ம் தேதி அதிகாலை 3.30 மணியளவில் மர்ம நபர்கள் சிலர் சாலையில் சுற்றி திரிந்துள்ளனர். அனைவரும் மேலாடைகள் ஏதும் இன்றி கையில் தாக்க கூடிய ஆயுதங்களையும் வைத்துள்ள காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த வீடியோவை பார்த்த அப்பகுதி மக்களை பீதியில் உறைந்துள்ளனர். மேலும் காவல்துறைக்கு கிடைத்துள்ள இந்த சிசிடிவி காட்சிகளை வைத்து மர்ம நபர்களை போலீசார் தனி குழு அமைத்து தேடி வருவதும் குறிப்பிடத்தக்கது.
இதனிடையே அதே கும்பல் அன்றைய தினமே பீளமேடு குருகார்டன் பகுதியில் சுற்றி திரிந்து இருப்பது அப்பகுதியில் இருக்கும் சிசிடிவி காட்சிகள் மூலம் தெரியவந்தது. 3 நபர்கள் முகத்தை மறைத்துக்கொண்டு தைரியமாக சுற்றி வருவது சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது. மேலும் இவர்கள் என்ன நோக்கத்திற்காக சுற்றி திரிகின்றனர் என்பது குறித்து பீளமேடு போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் மர்ம நபர்கள் சிலர், கடந்த 5 மாதங்களுக்கு முன்பு சிங்காநல்லூர் பகுதியில் இரவு நேரத்தில் ஆயுதங்களுடன் வந்து அப்பகுதியில் இருந்த சந்தன மரங்களை வெட்டி கடத்தியதும் குறிப்பிடத்தக்கது.
கோவை நகரில் இரவு நேரங்களில் முகமூடி அணிந்து, அரைநிர்வாணமாக ஆயுதங்களுடன் சுற்றிதிரியும் மர்மகும்பல். பீளமேடு, சிங்காநல்லூர் போலீசார் மர்மநபர்கள் குறித்து விசாரணை.@News18TamilNadu pic.twitter.com/vcn0TTAt3P
— Gurusamy (@gurusamymathi) July 25, 2020

மற்ற செய்திகள்
