'கொரோனாவது, வைரஸாவது...' 'இலவசமாக விற்கப்பட்ட சிக்கன் பக்கோடா...' விழிப்புணர்வை உருவாக்க புதிய ஐடியா...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Issac | Mar 15, 2020 11:06 AM

சென்னை ஆலந்தூரில் இலவசமாக விற்கப்பட்ட சிக்கன் பக்கோடாவை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது.

Chicken pakoda sold for free to raise awareness

சென்னை ஆதம்பாக்கம் கக்கன் நகர் பகுதியில் அஷ்ரப் அலி, கார்த்திக் ஆகியோர் கோழி இறைச்சிக்கடை நடத்தி வருகின்றனர்.  கோழியில் இருந்து கொரோனா வைரஸ் பரவுவதாக வதந்தி பரவியதில் கோழி விற்பனை மந்தமாகியுள்ளது. இதனால் கோழி வியாபாரிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் கோழியில் இருந்து பரவவில்லை என்னும் விழிப்புணர்வை எப்படி மக்களிடம் கொண்டுபோய் சேர்ப்பது என்று யோசித்தனர். அதன் விளைவாக கொரோனா வைரஸ் கோழியினால் பரவவில்லை என்று பதாகைகளை கட்டியவாறு தெரியப்படுத்தும் விதமாக, அஷ்ரப் அலி, கார்த்திக் ஆகியோர் 500 கிலோ கோழி இறைச்சியில் சிக்கன் பக்கோடா தயார் செய்து பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கினர்.

இலவசமாக சிக்கன் பக்கோடா என்றவுடன் பொதுமக்கள் கொரோனாவது, வைரஸாவது, என்னும் சொல்லும் வகையில் முண்டியடித்துக் கொண்டு சிக்கன் பக்கோடாவை இலவசமாக வாங்கிச் சென்றனர்.

இதேப்போல் மக்களை விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக திருச்செங்கோட்டிலும் இலவசமாக சிக்கன் பக்கோடா விற்பனை செய்தனர். அங்கும் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து வாங்கி மகிழ்ச்சியாக உண்டனர்.

Tags : #CHICKENPAKODA