"இது என்ன நியாயம்னு புரியல".. சாலையில் போராட்டத்தை துவங்கிய நடிகை ஷகீலா.. வீடியோ..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் தனியார் குடியிருப்பு வளாகத்தில் பேச்சுலர்ஸ்-க்கு கூடுதல் பராமரிப்பு கட்டணம் விதிக்கப்படுவதற்காக குடியிருப்பாளர்கள் நடித்திய போராட்டத்தில் நடிகை ஷகீலா கலந்துகொண்டு அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்திருக்கிறார். இது தொடர்பாக அவர் பகிர்ந்துள்ள வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் பல்வேறு படங்களில் நடித்தவர் ஷகீலா. தற்போது பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டும் வருகிறார். இந்த நிலையில் நேற்று சென்னை, சூளைமேட்டில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த பேச்சுலர்ஸ்-க்கு ஆதரவாக குரல் கொடுத்திருக்கிறார் ஷகீலா.
இந்த அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பமாக பலர் வசித்து வரும் நிலையில் பேச்சுலர்ஸ் சிலரும் வசித்து வருகின்றனர். குடும்பங்களுக்கு பராமரிப்பு கட்டணமாக மாதம் 2,500 ரூபாய் வசூலிக்கப்படும் நிலையில் பேச்சுலர்ஸ்-க்கு மட்டும் மாதம் 9000 ரூபாய் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து பேச்சுலர்ஸ் நிர்வாகத்திடம் முறையிட்ட நிலையில் சில நாட்களாக அவர்களுக்கு தண்ணீர் வசதியை நிர்வாகம் நிறுத்திவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.
இதனை தொடர்ந்து அந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசித்துவந்த பேச்சுலர்ஸ் சாலையில் அமர்ந்து நேற்று கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை கேள்விப்பட்டு அங்கு சென்ற ஷகீலா, அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார்.
இது தொடர்பாக அவர் பேசியுள்ள வீடியோவில்," இந்த அப்பார்ட்மெண்ட்-ல பேச்சுலர்ஸ்-ம் இருக்காங்க. அவங்களுக்கு மட்டும் மாதம் 9000 ரூபாய் மெயின்டனன்ஸ்-க்காக வாங்குறாங்க. அவங்க கட்டலைன்னா தண்ணியை நிறுத்திடறாங்க. இது என்ன நியாயம்னு புரியல. இங்கே பெண்களும் இருக்காங்க. பக்கத்து வீட்டுல தண்ணி வாங்க கூட அவங்க தடுக்குறாங்களாம். இதை எதிர்த்து குரல் கொடுக்க இங்க வந்திருக்கேன்" என்கிறார். இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்
