"உங்களுக்கும் ஆமிருக்கும் கல்யாணம் ஆகிடுச்சாமே?".. ரசிகரின் கேள்விக்கு பாவனி கொடுத்த THUG ரிப்ளை.!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நடிகை பாவனி தனது ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்திருக்கிறார். இதில் சில விநோதமான கேள்விகளுக்கு பாவனி கொடுத்த கலாய் ரிப்ளை தற்போது வைரலாகி வருகிறது.

பாவனி
தமிழில் சின்னத்தம்பி சீரியல் மூலம் மக்களிடையே அறிமுகமானவர் பாவனி. ஹைதராபாத்தை சேர்ந்தவரான இவர் ரெட்டை வால் குருவி, பாசமலர், தவனை முறை வாழ்க்கை, ராசாத்தி, அன்பே சிவம் ஆகிய தொடர்களில் நடித்திருக்கிறார். பிக்பாஸ் சீசன் 5ல் கலந்துகொண்டு ஏராளமான மக்களை கவர்ந்தார் பாவனி. இதனிடையே கோரியோகிராஃபரான ஆமீருடன் நட்பாக பழகிவந்த இவர் பின்னர் இருவரும் காதலிப்பதாகவும் அறிவித்திருந்தார். இருப்பினும் திருமணம் குறித்து இருவருமே எவ்வித அறிவிப்பையும் வெளியிடவில்லை.
துணிவு
நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களின் வெற்றிக்கு பிறகு நடிகர் அஜித்குமார்- H.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணைந்த படம் 'துணிவு'. பொங்கலை முன்னிட்டு ஜனவரி மாதம் 10 ஆம் தேதி துணிவு திரைப்படம் வெளிவந்தது. துணிவு திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. துணிவு படம் கடந்த பிப்ரவரி 8 ஆம் தேதி முதல் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகி உள்ளது. இதில் பாவனி மற்றும் ஆமிர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர்.
கேள்வி
இந்த சூழ்நிலையில் பாவனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்திருக்கிறார். அப்போது ஒருவர், உங்களுக்கும் அமீருக்கு திருமணம் நடந்துவிட்டதா? அதிகாரப்பூர்வாக எதுவும் சொல்லவில்லையே? என கேட்டிருந்தார். இதற்கு பாவனி கொடுத்த ரிப்ளை தான் ரசிகர்களுக்கு மத்தியில் பேச்சாக இருக்கிறது.
அந்த ரசிகரின் கேள்விக்கு பாவனி,"கடந்த மாதம் நான் கர்ப்பமாக இருப்பதாக சொன்னார்கள். அதன் பிறகு நாங்கள் பிரேக் அப் செய்துவிட்டதாக பேசினார்கள். இப்போது இதுவா? அடுத்தது என்ன?" என சிரிக்கும் எமோஜிக்களுடன் ரிப்ளை கொடுத்திருக்கிறார்.
