"அந்த பையன் சொன்ன விஷயம்".. நெகிழ வைத்த இளம் ரசிகர்.. 'ருத்ரன்' ராகவா லாரன்ஸ் EXCLUSIVE..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நடிகர் மற்றும் கோரியோகிராஃபருமான ராகவா லாரன்ஸ் மற்றும் ருத்ரன் படத்தின் இயக்குனர் கதிரேசன் ஆகியோர் நமது சேனலுக்கு பிரத்யேக நேர்காணலை அளித்திருக்கின்றனர்.

தமிழ் சினிமாவில் நடிகர், கோரியோகிராஃபர், இயக்குநர் என பல துறைகளில் இயங்கி வருபவர் ராகவா லாரன்ஸ். இவருடைய அடுத்த படம் 'ருத்ரன்'. இந்த படத்தில் ராகவா லாரன்ஸ்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். பொல்லாதவன், ஆடுகளம், ஜிகர்தண்டா போன்ற படங்களைத் தயாரித்த தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் ருத்ரன் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.
திரைக்கதை எழுத்தாளர் கே.பி.திருமாறன் கதை, திரைக்கதை எழுதுகிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர் ISC ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தில் முக்கியமான வேடத்தில் நடிகர் சரத்குமார் நடித்துள்ளார். இந்த படத்தில் வில்லனாக பூமி எனும் கதாபாத்திரத்தில் சரத்குமார் நடிக்கிறார். இந்த திரைப்படம் இந்த ஆண்டு தமிழ் புத்தாண்டு தினத்தன்று (14.04.2023) வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ராகவா லாரன்ஸ் மற்றும் ருத்ரன் படத்தின் இயக்குநர் கதிரேசன் ஆகியோர் நமது சேனலுக்கு பிரத்யேக நேர்காணலை அளித்திருக்கின்றனர். அதில் படம் குறித்த பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் பேசியிருக்கின்றனர். படங்களுக்கு இடையே வருடக்கணக்கில் இடைவெளி விடுவது ஏன்? என ராகவா லாரன்ஸிடம் கேட்கப்பட்டது.
இதற்கு பதில் அளித்த அவர், " காஞ்சனா நல்லா ரீச் ஆச்சு. அதுக்காக அடுத்தடுத்து படம் எடுக்கணும்னு நினைக்க கூடாது. நல்ல கதை வரணும். அது மக்களுக்கு பிடிக்கிற மாதிரி இருக்கணும். குறிப்பா குடும்பமா மக்கள் வந்து படத்தை பார்க்கணும். ஆனால், இந்த இடைவேளை வேணும்னு யோசிச்சு பண்ணதில்லை. ஒருதடவை ராகவேந்திரா கோவிலுக்கு போயிருந்தேன். அப்போ ஒரு ரசிகர் என்னை பார்க்க வந்திருந்தார். ஏதோ படிப்பு அல்லது மருத்துவ உதவி கேட்டு வந்திருப்பாருன்னு நெனச்சேன். ஆனா அவர் பேசுறப்போ 'உங்களோட பெரிய ரசிகர் அண்ணா. வருஷத்துக்கு ஒரு படமாவது கொடுங்க. காத்திருக்க முடியல'ன்னு கண்கலங்கியபடி சொன்னாரு. அப்போதான் தோணுச்சு. நாமும் அப்படி படங்களை பண்ணனும்னு" என்றார்.
