‘பிரபல மல்யுத்த வீரரை மணக்கும்’... ‘தங்கல் திரைப்படத்தின்’... ‘ஒரிஜினல் இளைய மகள்’!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Sangeetha | Nov 25, 2019 04:48 PM

இந்தியாவின் பிரபல மல்யுத்த வீரரான பஜ்ரங் புனியாவுக்கும், மல்யுத்த வீராங்கனையான சங்கீதா போகத்துக்கும் இடையே, நிச்சயதார்த்தம் நடைப்பெற்று முடிந்துள்ளது.

wrestler Bajrang Punia gets engaged to Sangeeta Phogat

ஹரியானாவைச் சேர்ந்தவர் பிரபல மல்யுத்த வீரரான பஜ்ரங் புனியா (25). இவர் 65 கிலோ எடைப் பிரிவில், மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகளில் பல்வேறு பதக்கங்களை வென்றுள்ளார். விளையாட்டில் சாதித்த இவருக்கு, அர்ஜூனா விருது, பத்ஸ்ரீ விருதும் வழங்கப்பட்டுள்ளது. இதேபோல், 55 கிலோ எடைப் பிரிவில் மல்யுத்த வீராங்கனையாக சாதித்து வரும், சங்கீதா போகத்தும் (21), இவரும் கடந்த 3 வருடங்களாக காதலித்து வந்தனர்.

சங்கீதா போகத், மல்யுத்த வீரரும், துரோணாச்சாரி விருது பெற்றவருமான மகாவீர் சிங்கின் இளைய மகள் ஆவார். நடிகர் அமீர்கான் நடித்து வெளியான ‘தங்கல்’ திரைப்படம், மகாவீர் சிங்கின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுத்ததுதான். சங்கீதா போகத்தின், மூத்த சகோதரிகள் கீதா போகத், பபிதா குமாரி,  ரிது போகத் மற்றும் சித்தப்பா மகள்களான வினேஷ் போகத், பிரியங்கா போகத் என அனைவரும் மல்யுத்த வீராங்கனைகள் தான். இதில், மூத்த சகோதரியான கீதா போகத், பவன் குமார் என்ற மல்யுத்த வீரரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இதேபோல், இளைய சகோதரியான சங்கீதா போகத்தும், மல்யுத்த வீரரை காதலித்து வந்தது, இரு வீட்டாருக்கும் தெரியவந்தது. இதை அடுத்து, குடும்பத்தினர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். அதன்படி, கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று, சோனிபட்டில் உள்ள பஜ்ரங் புனியாவின் இல்லத்தில், உறவினர்கள் முன்னிலையில் நிச்சயதார்த்தம் செய்துக்கொண்டனர். வரும் 2020 ஆண்டு, டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டி நடைபெறுவதால், அதன்பிறகு இவர்களது திருமணம் நடைப்பெற உள்ளது. 

Tags : #DANGAL #WRESTLER #BAJRANG PUNIA #SANGEETA PHOGAT