இஷான் கிஷன் 'ஓப்பனிங்' பேட்ஸ்மேனா களம் இறங்கியதற்கு 'அவரு' தான் காரணம்...! - 'உண்மையை' வெளிப்படையாக சொன்ன 'பேட்டிங்' பயிற்சியாளர்...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடி-20 உலகக்கோப்பை தொடரில் இஷான் கிஷன் துவக்க வீரராக களமிறக்கப்பட்டதற்கான காரணத்தை இந்திய அணியின் பயிற்சியாளர் விளக்கமளித்துள்ளார்.
இந்திய அணி உலகக்கோப்பை டி-20 கிரிக்கெட் தொடரில் அபாரமாக விளையாடும் என்று எதிர்பார்த்த சூழலில் கடந்த இரு போட்டிகளில் மிக மோசமான ஆட்டத்தையே வெளிப்படுத்தியது.
அதோடு, முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொண்ட இந்திய அணி யாரும் நினைக்காத அளவிற்கு சொர்ப்பமாக ஆட்டத்தை கைவிட்டது. அதையடுத்து நியூசிலாந்துக்கு எதிரான நடைபெற்ற கடந்த போட்டியில் ரோஹித் சர்மாவிற்கு பதிலாக இஷான் கிஷன் துவக்க வீரராக களமிறக்கப்பட்டார். இது கிரிக்கெட் சூழலில் சிறு பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், தற்போது இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளரான விக்ரம் ரத்தோர், இஷான் கிஷன் துவக்க வீரராக களமிறக்கப்பட்டதற்கான காரணத்தை செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கூறிய விக்ரம் ரத்தோர், 'நியூசிலாந்து அணிக்கு எதிராக போட்டி நடைபெற முதல் நாள் தான் சூர்யகுமார் யாதவிற்கு தசைபிடிப்பு பிரச்சனை ஏற்பட்டது. இதன் காரணமாகவே இஷான் கிஷனை களமிறக்க முடிவு செய்தோம்.
இதற்கு முன்பு இஷான் கிஷன் ஐபிஎல் தொடரில் துவக்க வீரராக களமிறங்கி மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். அதோடு, அவர் இடது கை பேட்ஸ்மேன் என்பதாலும் தான் அவரை துவக்க வீரராக களமிறக்கினோம்.
இஷான் மீண்டும் பட்டியலில் சேர்க்கப்பட்டது விவகாரம் ஒட்டுமொத்த நிர்வாகிகளாலும் எடுக்கப்பட்ட முடிவு. அந்த ஆலோசனை குழுவில் ரோஹித் சர்மாவும் இடம் பெற்றிருந்தார். அதோடு மிடில் ஆர்டருக்கு பிறகு இடது கை ஆட்டைக்காரர்களான ரிஷப் பண்ட், ஜடேஜா போன்றவர்கள் களமிறங்குகிறார்கள் அதனால் தான் அவர்களுக்கு முன்பே இடது கை ஆட்டக்காரர் இஷான் கிஷன் முன்னதாக களமிறக்கப்பட்டார்' எனக் கூறியுள்ளார்.