இதுவரை தோல்வியே சந்திக்காத பாக்ஸிங் வீரர்.. ‘இவருக்கா இப்படி நடக்கணும்’.. சோகத்தில் விளையாட்டு உலகம்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதோல்வியே சந்திக்காத குத்துச்சண்டை வீரர் மூசா யமக், பாக்சிங் ரிங்கிற்குள் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தொழில்முறை குத்துச்சண்டை வீரரான மூசா யமக் (Musa Yamak), துருக்கி நாட்டில் பிறந்தவர். இவருக்கு வயது 38. இதுவரையில் அவர் விளையாடிய 75 தொழில்முறை சார்ந்த குத்துச்சண்டை போட்டிகளில் ஒன்றில் கூட தோல்வி அடைந்தது கிடையாது என சொல்லப்படுகிறது.
கடந்த 2017-ம் ஆண்டு தான் அவர் இந்த குத்துச்சண்டை விளையாட்டை விளையாட தொடங்கியுள்ளார். ஜெர்மனியில் வசித்து வந்த மூசா யமக், இந்த ஆண்டு WBF பட்டத்தை வென்று உலக அளவில் பிரபலமானவராக அறியப்பட்டார்.
இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை உகாண்டா வீரர் ஹம்ஸா வண்டேராவை (Hamza Wandera) எதிர்த்து மூசா யமக் விளையாடினார். அப்போது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் பாக்சிங் ரிங்கிற்குளே நிலைகுலைந்து சரிந்து விழுந்துள்ளார்.
உடனே அவரை போட்டி ஏற்பாட்டாளர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவர் மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். குத்துச்சண்டையில் தோல்வியே சந்திக்காத மூசா யமக், விளையாடிக் கொண்டிருந்தபோதே உயிரிழந்த சம்பவம் விளையாட்டு உலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ரசிகர்கள் பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்: http://behindwoods.com/bgm8