'நியூசிலாந்து' சென்ற 'பாகிஸ்தான்' கிரிக்கெட் அணியில்... 6 பேருக்கு 'கொரோனா'!!... வெளியான பரபரப்பு 'தகவல்'!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுபாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று டி 20 போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் நியூசிலாந்தில் வைத்து நடைபெறவுள்ளது.

இதற்காக பாகிஸ்தான் அணி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் நியூசிலாந்து சென்றடைந்தது. இதனிடையே, பாகிஸ்தான் அணியை சேர்ந்த 6 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான தகவலை நியூசிலாந்து கிரிக்கெட் அணி நிருவாகம் வெளியிட்டுள்ளது.
முன்னதாக, பாகிஸ்தானில் இருந்து கிளம்புவதற்கு முன் அனைவருக்கும் கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அனைவருக்கும் நெகடிவ் என பரிசோதனை முடிவுகள் வெளிவந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நியூசிலாந்து வந்தடைந்த பின்னர் ஆறு பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதில் வீரர்கள் எத்தனை பேர் என்பது குறித்த தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.
பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டி 20 போட்டி டிசம்பர் மாதம் 18 ஆம் தேதி ஆக்லாந்தில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
