"கிரிக்கெட்டையே சாவடிச்சு இருக்கீங்க..." ஹனுமா விஹாரியை சாடிய 'அரசியல்' பிரபலம்... "பதிலுக்கு அவரு குடுத்த 'REPLY' தான் இன்னைக்கி 'வைரல்'!!"

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Ajith | Jan 13, 2021 10:10 PM

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியின் கடைசி நாளில் இந்திய அணி வீரர்களான அஸ்வின் மற்றும் ஹனுமா விஹாரி ஆகியோர் சிறப்பாக ஆடி போட்டியை டிராவில் முடிக்க உதவினர்.

babul supriyo criticizes hanuma vihari and he give a classy reply

அஸ்வின், ஹனுமா விஹாரி என இருவரும் காயத்தால் அவதிப்பட்ட போதும் மேற்கொண்டு விக்கெட்டுகள் விழாமல் தடுப்பாட்டம் ஆடி இந்திய அணியை தோல்வியில் இருந்து மீட்டு அசத்தியிருந்தனர். இவர்கள் இருவருக்கும் கிரிக்கெட் ரசிகர்கள் உட்பட பல முன்னாள் வீரர்கள் என அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்திய அணி விளையாடிய டெஸ்ட் போட்டிகளில் மிக முக்கியமான, மகத்தான போட்டியில் ஒன்று இது எனவும் பலர் பாராட்டினர்.

ஆனால், அதே வேளையில் ஹனுமா விஹாரி தடுப்பாட்டம் ஆடாமல், இன்னும் சற்று அதிரடியாக ஆகியிருந்தால் இந்திய அணி வெற்றி பெற்றிக்கும் என்றெல்லாம் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்நிலையில், எம்.பியும், பிரபல பாடகருமான பபுல் சுப்ரியோவும், விஹாரியின் பேட்டிங்கை விமர்சனம் செய்து ட்வீட் ஒன்றை செய்திருந்தார்.

'7 ரன்கள் எடுக்க 109 பந்துகள் எதிர்கொண்டது என்பது மிகவும் கொடுமையானது. ஹனுமா பிஹாரி வளற்று சிறப்புமிக்க வெற்றியை இந்திய அணி பெறவிருந்ததை மட்டும் கொலை செய்யவில்லை. கிரிக்கெட்டையே அவர் கொலை செய்து விட்டார்' என கடுமையாக சாட்டியிருந்தார்.

இந்த டீவீட்டிற்கு கிரிக்கெட் ரசிகர்கள் அதிகம் எதிர் கருத்துக்களை முன் வைத்த நிலையில் சற்று பரபரப்பு கிளம்பியது. ஆனால், இந்த ட்வீட்டைக் கண்ட ஹனுமா விஹாரி, இரண்டே வார்த்தையில் கொடுத்த ரிப்ளே தற்போது அதிகம் வைரலாகி வருகிறது. தனது டீவீட்டில் விஹாரிக்கு பதிலாக, பிஹாரி என  பபுல் சுப்ரியோ குறிப்பிட்டிருந்தார். 

 

தனது பெயர் தவறாக இருப்பதைச் சுட்டிக் காட்டிய கொண்ட ஹனுமா விஹாரி, அந்த பதிவிற்கு வேறு எந்த பதில் கருத்தையும் தெரிவிக்காமல், தனது கோபத்தையும் கூட வெளிப்படுத்தாமல், பெயரில் தவறு இருப்பதை மட்டும் குறிப்பிட்டார். இந்த கமெண்ட் அதிகம் லைக்குகளை அள்ளி வருகிறது.

மற்ற செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Babul supriyo criticizes hanuma vihari and he give a classy reply | Sports News.