'கணவரின் கண்முன்னே துடிக்கத் துடிக்க...' 'இருவரையும் மரத்தில் கட்டிவைத்து...' பதபதைக்கும் சம்பவம்... !
முகப்பு > செய்திகள் > இந்தியாஜார்கண்ட் மாநிலம் தும்கா பகுதியில் கணவன் கண்முன்னே மனைவியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதி மக்களை கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது.

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை பெருகிவரும் சூழலில் தற்போது மேலும் ஒரு சம்பவம் ஜார்கண்ட் மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது. ஜார்கண்ட் மாநிலம் தும்கா பகுதியை சேர்ந்த கணவன் மனைவி இருவரும் தன் வேலைகளை முடித்துக் கொண்டு வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க அருகிலிருக்கும் சந்தைக்கு சென்றுள்ளனர்.
அவர்கள் செல்வதை கண்ட நான்கு பேர் கொண்ட கும்பல் தன்னுடைய குரூர எண்ணத்தை நிறைவேற்ற சரியான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர். சந்தையிலிருந்து வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்த கணவன் மனைவி இருவரையும் அந்த கும்பல் ஒரு காட்டுப்பகுதிக்குள் வலுக்கட்டாயமாக இழுத்துச்சென்று மரத்தில் கட்டி வைத்துள்ளனர்.
அதன் பிறகு அந்த பெண்ணை மட்டும் மரத்திலிருந்து கழட்டிவிட்டு கணவனின் கண்ணெதிரே மனைவியை கதற கதற பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளனர். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் போலீசாருக்கு அளித்த புகாரின் படி அந்த பகுதியின் ஊர்த் தலைவர் உட்பட மூவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
