VIDEO : "ஹெல்மெட் போடாம 'பைக்'குல எங்கடா 'ஊரு' சுத்திட்டு இருக்கீங்க??"... பைக் 'சாவி' எடுத்து பையன் 'நெத்தி'யிலேயே குத்திய 'போலீஸ்'... 'சர்ச்சை'யை கிளப்பிய தாக்குதல்!!
முகப்பு > செய்திகள் > இந்தியாஉத்தரகாண்ட் மாநிலத்தில் போலீசாரால் இளைஞர் ஒருவருக்கு ஏற்பட்ட தாக்குதல் கடும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலம், உத்தம் சிங் நகர் மாவட்டத்தின் ருத்ராபூர் என்னும் பகுதியில், இளைஞர் ஒருவர் தனது நண்பருடன் நேற்று இரவு பைக்கில் சென்றுள்ளார். அப்போது அந்த இளைஞர், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியுள்ளார். இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் பணியில் இருந்த மூன்று போலீசார், பைக்கை தடுத்து நிறுத்தியுள்ளனர். அப்போது 'ஹெல்மெட் ஏன் அணியவில்லை?' எனக்கூறி, போலீசார் திட்டியுள்ளதாக தெரிகிறது.
தொடர்ந்து, இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்ட நிலையில், இளைஞரின் பைக்கில் இருந்து சாவியை எடுத்த போலீசார், அதனை இளைஞரின் நெற்றியிலே குத்தியுள்ளார். தொடர்ந்து இளைஞரின் நெற்றியில் இருந்தும் ரத்தம் வடிந்துள்ளது. உடனடியாக, இளைஞரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இது தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வெளியாகி கடும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
இந்த சம்பவம் கடும் சர்ச்சையானதை தொடர்ந்து, சம்மந்தப்பட்ட மூன்று போலீசாரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். போலீசாரின் இந்த கொடூர தாக்குதலை எதிர்த்து அப்பகுதியில் சில இடங்களில் போராட்டங்களும் நடந்தது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
